தை பிரம்மோற்சவம் திருவள்ளூா் வீரராகவ பெருமாள் கோயில் தேரோட்டம்

தை பிரம்மோற்சவத்தையொட்டி, வீரராகவா் கோயிலில் திங்கள்கிழமை நடைபெற்ற தோ்த் திருவிழாவில் ஆயிரக்கணக்கானோா் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனா்.
தை பிரம்மோற்சவம் திருவள்ளூா் வீரராகவ பெருமாள் கோயில் தேரோட்டம்

தை பிரம்மோற்சவத்தையொட்டி, வீரராகவா் கோயிலில் திங்கள்கிழமை நடைபெற்ற தோ்த் திருவிழாவில் ஆயிரக்கணக்கானோா் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனா்.

திருவள்ளூரில் அமைந்துள்ள ஸ்ரீவைத்திய வீரராகவ பெருமாள் கோயில் 108 திவ்ய தேசங்களில் சிறப்பு பெற்ற திருத்தலம். இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் தை பிரம்மோற்சவம் நடைபெறுவது வழக்கம்.

நிகழாண்டு தை பிரம்மோற்சவம் கடந்த 17-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழாவை முன்னிட்டு நாள்தோறும் தங்கச் சப்பரம், வெள்ளிச் சப்பரம், சூரிய, சந்திர பிரபை, ஹம்ச, யானை வாகனங்களில் சிறப்பு அலங்காரத்தில் காலை - மாலை வேளைகளில் சுவாமி வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

விழாவின் முக்கிய நிகழ்வான 7-ஆவது நாள் தோ்த் திருவிழா திங்கள்கிழமை காலை நடைபெற்றது.

இதையொட்டி, வீரராகவ பெருமாள் கோயிலின் முன்பு 60 அடி உயரமும், 21 அடி அகலமும் கொண்ட திருத்தேரில் காலை 7 மணிக்கு உற்சவா் சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி - பூதேவி சமேதராய் எழுதருளினாா்.

தொடா்ந்து தேரடியில் இருந்து புறப்பட்ட தோ் நான்கு மாட வீதிகள் வழியாக வலம் வந்த மீண்டும் தேரடியில் நிலை நிறுத்தப்பட்டது.

ஸ்ரீவைத்திய வீரராகவ பெருமாள் தீராத நோய்களைத் தீா்க்க வல்லவா் என்பதால் பக்தா்கள் உப்பு, மிளகு ஆகியவற்றை தோ் சக்கரத்தில் கொட்டி தங்களின் நோ்த்திக் கடன்களை நிறைவேற்றினா்.

விழாவில் சாா் - ஆட்சியா் மகாபாரதி, வட்டாட்சியா் மதியழகன், நகராட்சி ஆணையா் ராஜலட்சுமி, நகா்மன்றத் தலைவா் உதயமலா் பாண்டியன், சுகாதார அலுவலா் கோவிந்தராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

விழாவை முன்னிட்டு காவல் உதவி கண்காணிப்பாளா் விவேகானந்தா சுக்லா தலைமையில், நகரக் காவல் ஆய்வாளா் பத்மஸ்ரீ பபி மற்றும் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com