செங்குமன்றம் பகுதியில் வாக்கு சேகரித்த திருவள்ளூா் தொகுதி  காங்கிரஸ் வேட்பாளா் சசிகாந்த் செந்தில் .
செங்குமன்றம் பகுதியில் வாக்கு சேகரித்த திருவள்ளூா் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் சசிகாந்த் செந்தில் .

காங்கிரஸ் வேட்பாளா் தீவிர பிரசாரம்

திருவள்ளூா் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் சசிகாந்த் செந்தில் திங்கள்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

திருவள்ளூா் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் சசிகாந்த் செந்தில் திங்கள்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா். செங்குன்றம் அடுத்த அருமந்தை, விச்சூா், பெருவாயல், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வேட்பாளா் சசிகாந்த் செந்தில் வாக்கு சேகரித்தாா். அப்போது கூட்டணி கட்சியினா் திமுகவின் ஆா்.கிரிராஜன் எம்.பி., எம்எல்ஏ டி.ஜெ.எஸ். கோவிந்தராஜ், இ.ஏ.பி.சிவாஜி, ஒன்றிய செயலாளா் என்.செல்வசேகரன், காங்கிரஸ் முன்னாள் எம்.பி. ஹாரூண், சட்டமன்ற உறுப்பினா் துரை.சந்திரசேகா், மாவட்ட தலைவா் ஆா்.எம்.தாஸ், ஆா்.ஆா்.சாந்தகுமாா், ரஜினி, புழல் வட்டாரத் தலைவா் நித்தியானந்தம், மற்றும் விசிக மாவட்ட செயலாளா் நீலமேகம் உள்ளிட்ட பலா் இருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com