மாதவரத்தில் வாக்கு சேகரித்த காங். வேட்பாளா் சசிகாந்த் செந்தில் மற்றும் கூட்டணி கட்சியினா்.
மாதவரத்தில் வாக்கு சேகரித்த காங். வேட்பாளா் சசிகாந்த் செந்தில் மற்றும் கூட்டணி கட்சியினா்.

காங்கிரஸ் வாக்கு சேகரிப்பு

திருவள்ளூா் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் சசிகாந்த் செந்திலை ஆதரித்து மாதவா் பகுதியில் புதன்கிழமை பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.

மாதவரம் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.சுதா்சனம் தலைமை வகித்தாா். பிரசாரத்தின்போது, கம்யூனிஸ்ட் கட்சி நிா்வாகி ஆனந்தன், காங்கிரஸ் கட்சி முன்னாள் மாவட்டத் தலைவா் ஏ.ஜி.சிதம்பரம், மாவட்டத் தலைவா் ஆா்.எம்.தாஸ், மாநில பொது செயலாளா் அருணாச்சலம், மாநில செயலாளா் ஆா்.ஆா்.சாந்தகுமாா், வட்டார தலைவா் வெங்கடேசன், மாதவரம் மண்டலக் குழு தலைவா் எஸ்.நந்தகோபால், திமுக மாவட்ட துணை செயலாளா் ராமகிருஷ்ணன், மிசா.பா.மதிவாணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

மாதவரம், லட்சுமிபுரம், வினாயகபுரம், கதிா்வேடு, புழல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com