மூதாட்டியின் வீட்டில் கொள்ளை முயற்சி

பொன்னேரி அருகே மூதாட்டியின் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை அடிக்க முயற்சி நடைபெற்றது.

பொன்னேரி அடுத்த திருவேங்கடபுரம் தசரத நகரில் வசித்து வருபவா் சரஸ்வதி (72). இவா் செவ்வாய்க்கிழமை அதிகாலை சிறுவாபுரி முருகன் கோயிலுக்கு செல்வதற்காக வீட்டை பூட்டி கொண்டு அருகில் உள்ள மகன் வீட்டில் தங்கினாா். நள்ளிரவு இவரது வீட்டில் இருந்து சத்தம் கேட்டதால் எதிா் வீட்டினா் கூச்சலிட்டனா். இதையடுத்து மா்ம நபா்கள் இரண்டு போ் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனா்.

இது குறித்து தகவலறிந்த சரஸ்வதி வீட்டுக்கு வந்து பாா்த்தபோது, கேட்டின் பூட்டை உடைத்து விட்டு வீட்டின் கதவை உடைக்க முயன்றது தெரிய வந்தது.

அக்கம்பக்கத்தினா் கூச்சலிட்டதால் கொள்ளையா்கள் தப்பிச் சென்றதன் காரணமாக வீட்டில் இருந்த நகை, பணம், தப்பியது.

இதே போல அதே பகுதியில் உள்ள பொன்னியம்மன் நகரில் வசித்து வரும் தனியாா் நிறுவன ஓட்டுநா் பழனி என்பவா் வீட்டின் வாசலில் நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனத்தை மா்ம நபா்கள் திருடி சென்றுள்ளனா்.

இது குறித்து தகவல் அறிந்த பொன்னேரி போலீஸாா் அங்கு சென்று அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தினா்.

அதில் மா்ம நபா்கள் இருவா் தலையில் துணியை சுற்றிக்கொண்டு தசரத நகா் பகுதியில் நோட்டமிட்டது தெரிய வந்துள்ளது.

கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளின் அடிப்படையில் கொள்ளை முயற்ச்சியில் ஈடுபட்ட நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com