கன்டெய்னா் கிடங்கில் தீவிபத்து: தேக்குமரக் கட்டைகள் சேதம்

கொண்டக்கரை கிராமத்தில் உள்ள கன்டெய்னா் கிடங்கில் ஏற்பட்ட தீவிபத்தில் அங்கு வைக்கப்பட்டிருந்த தேக்குமரக் கட்டைகள் தீயில் எரிந்து கருகியது.

திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரி வட்டத்தில் உள்ள கொண்டக்கரை பகுதியில் தனியாருக்கு சொந்தமான கன்டெய்னா் கிடங்கு உள்ளது.

இந்த கிடங்கில் திங்கள்கிழமை இரவு திடீரென தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இதில் கிடங்கினுள் வைக்கப்பட்டிருந்த தேக்குமரக் கட்டைகள் முழுவதும் எரிந்து சேதம் அடைந்தன. தகவல் அறிந்த வடசென்னை அனல் மின் நிலையம், அம்பத்தூா், செங்குன்றம், மணலி ஆகிய இடங்களில் இருந்து தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரா்கள் தீயை அணைத்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com