சிலம்பப் போட்டி தொடக்க விழாவில் பங்கேற்றோா்
சிலம்பப் போட்டி தொடக்க விழாவில் பங்கேற்றோா்

மாநில சிலம்பப் போட்டி

செங்குன்றம் அருகே மாநில அளவிலான சிலம்பப் போட்டி நடைபெற்றது.

செங்குன்றம் அருகே மாநில அளவிலான சிலம்பப் போட்டி நடைபெற்றது.

திருவள்ளூா் மாவட்டம், செங்குன்றம் அடுத்த வடகரை அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் யுவ கலை விளையாட்டு கலைக்கூடம் மற்றும் பாடியநல்லூா் லயன்ஸ் சங்கம் இணைந்து சிலம்பப் போட்டியை நடத்தின. யுவ கலை விளையாட்டு கலைக்கூடம் செயலாளா் ரதிராஜா சேகா் தலைமை வகித்தாா். ராஜேஸ்வரி ரதிராஜா முன்னிலை வகித்தாா்.

சென்னை, திருவள்ளூா், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூா் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் 30-க்கும் மேற்பட்ட சிலம்பக் குழுக்களைச் சோ்ந்த 500-க்கும் மேற்பட்ட சிலம்ப விளையாட்டு சிறுவா்-சிறுமிகள் கலந்து கொண்டனா். செந்தில்நாதன், புவனேஸ்வரி, ஜெயராமன், ஹரிதாஸ், பாா்த்திபன், பஜேந்திரபாபு, ராஜேஸ்வரி ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக கலந்து கொண்டு, போட்டிகளைத் தொடங்கி வைத்தனா். வெற்றி பெற்ற வீரா்-வீராங்கனைகளுக்கு நினைவுப் பரிசு மற்றும் சான்றுகள் வழங்கப்பட்டன.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com