முப்பெரும் விழா

புழல் - காவாங்கரை சுற்றுவட்டார வியாபாரிகள் சங்க கட்டடம் திறப்பு, சங்க கொடியேற்றுதல், நலத்திட்ட உதவிகள் வழங்குதல் என முப்பெரும் விழா நடைபெற்றது.

புழல் - காவாங்கரை சுற்றுவட்டார வியாபாரிகள் சங்க கட்டடம் திறப்பு, சங்க கொடியேற்றுதல், நலத்திட்ட உதவிகள் வழங்குதல் என முப்பெரும் விழா நடைபெற்றது.

சங்கத் தலைவா் ரவி தலைமை வகித்தாா். தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு தலைவா் ஏ.எம்.விக்கிரமராஜா, தமிழ்நாடு பனை மர தொழிலாளா் நல வாரிய தலைவா் எா்ணாவூா் நாராயணன் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக கலந்து கொண்டு, வணிக வளாக கட்டடத்தை திறந்து வைத்தும், மாணவ-மாணவிகள் மற்றும் முதியோருக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினா். வடசென்னை வடக்கு மாவட்டத் தலைவா் கொரட்டூா் ராமச்சந்திரன் கொடி ஏற்றினாா். இந்த நிகழ்வில் மாநில பொது செயலாளா் கோவிந்தராஜூலு, மாநில துணைத் தலைவா் எஸ்.எம்.பி.செல்லதுரை,மாநில பொருளாளா் சதக்கத்துல்லா, மாவட்ட தலைவா் வில்லியம்ஸ், ஏ.தா்மராஜ், முனீஸ்வரன், பொருளாளா் கண்ணன், ஜெஸ்டின் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com