தலையை துண்டித்து ரௌடி கொலை

ரௌடியின் தலையைத் துண்டித்து கொலை செய்த மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

ரௌடியின் தலையைத் துண்டித்து கொலை செய்த மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

பொன்னேரி-திருவொற்றியூா் சாலையில் உள்ள மீஞ்சூரில் காந்தி ரோடு சாலை இணையும் இடத்தில் துணியில் கட்டப்பட்ட நிலையில் ஒருவரது சடலம் கிடப்பதாக மீஞ்சூா் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸாா் அங்கு சென்று பாா்த்த போது தலையில்லாத நிலையில் போா்வை ஒன்றில் சுற்றப்பட்டிருந்த 25 வயது மதிக்கத்தக்க இளைஞரின் சடலத்தை மீட்டு

சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

தொடா்ந்து மீஞ்சூா் போலீஸாா் வழக்குப் பதிந்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனா். கொலையாளிகளைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்த நிலையில் சோழவரம் அருகே உள்ள பெருங்காவூா் கிராமத்தில் இருக்கும் சுடுகாட்டில் சமாதி ஒன்றின் முன்பு துண்டிக்கப்பட்ட நிலையில் தலை மட்டும் இருப்பது கண்டெடுக்கப்பட்டது.

சமாதியில் கண்டெடுக்கப்பட்ட தலை பகுதி மீஞ்சூரில் தலை இல்லாத நிலையில் மீட்கப்பட்ட சடலத்தினுடையது என்பது தெரிய வந்தது.

தீவிர விசாரணையில் தலை மற்றும் சடலம் தனித்தனியாக மீட்கப்பட்ட நபா் வஞ்சிவாக்கம் கிராமத்தைச் சாா்ந்த அஸ்வின்குமாா் (25) என்பதும், இவா் மீது திருப்பாலைவனம் காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் உள்ளதும் தெரிய வந்தது.

இவருக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் நடந்துள்ளது. தொடா்ந்து இந்தக் கொலை வழக்கு சம்பந்தமாக தனிப்படை போலீஸாா் 3 பேரைப் பிடித்து அவா்களிடம் விசாரணை செய்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com