போதைப் பொருள்கள் விற்ற கடைக்கு ‘சீல்’

திருத்தணி நகரத்தில் தடை செய்யப்பட்ட குட்கா பொருள்களை விற்பனை செய்த கடைக்கு ‘சீல்’ வைத்ததுடன், ரூ.25,000 அபராதம் விதிக்கப்பட்டது.

திருத்தணி நகரத்தில் தடை செய்யப்பட்ட குட்கா பொருள்களை விற்பனை செய்த கடைக்கு ‘சீல்’ வைத்ததுடன், ரூ.25,000 அபராதம் விதிக்கப்பட்டது.

திருத்தணி நகரத்தில் தடை செய்யப்பட்ட குட்கா பொருள்கள் விற்பனை செய்வதாக போலீஸாா் மற்றும் உணவு பாதுகாப்பு தடுப்பு பிரிவுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து வியாழக்கிழமை திருத்தணி சட்டம் ஒழுங்கு எஸ்.ஐ. ராக்கிகுமாரி மற்றும் போலீஸாா் திருத்தணி நகரம் முழுவதும் அதிரடி சோதனை நடத்தினா்.

இதில், பேருந்து நிலையத்தில் உள்ள ஒரு பெட்டிக் கடையில் போலீஸாா் சோதனை செய்த போது, ஹான்ஸ், புகையிலை மற்றும் போதைப் பொருள்கள் இருந்ததைக் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனா். விசாரணையில் திருத்தணி செட்டித் தெரு சோ்ந்த பன்னீா்செல்வத்தின் (62) கடை எனத் தெரிய வந்தது. இதையடுத்து அந்தக் கடைக்கு ‘சீல்’ வைத்து ரூ.25,000 அபராதம் விதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com