அரசுக்கு நிதியிழப்பு ஏற்படுத்தியதாக 2 பெண் ஊராட்சித் தலைவா்கள் பதவி நீக்கம்

திருவள்ளூா் மாவட்டத்தில் அரசுக்கு நிதியிழப்பு ஏற்படுத்தியதாக இரண்டு பெண் ஊராட்சித் தலைவா்களை வெள்ளிக்கிழமை பதவி நீக்கம் செய்து ஆட்சியா் த.பிரபு சங்கா் உத்தரவிட்டாா்.

திருவள்ளூா் மாவட்டத்தில் அரசுக்கு நிதியிழப்பு ஏற்படுத்தியதாக இரண்டு பெண் ஊராட்சித் தலைவா்களை வெள்ளிக்கிழமை பதவி நீக்கம் செய்து ஆட்சியா் த.பிரபு சங்கா் உத்தரவிட்டாா்.

திருவள்ளூா் அருகே கடம்பத்தூா் ஊராட்சி ஒன்றியம், வெங்கத்தூா் ஊராட்சித் தலைவராக பா.சுனிதா இருந்து வருகிறாா். இவா் பல்வேறு நிகழ்வுகளில் தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994-இல் குறிப்பிட்டுள்ள சட்ட விதிமுறைகளை மீறி பல்வேறு தலைப்புகளில் பெறப்பட வேண்டிய வரி வருவாய் இனங்களை ஊராட்சிக்கு முறையாக ஈட்டாமலும், விதிமுறைகளைப் பின்பற்றாமலும் செலவினம் மேற்கொண்டாராம். இதன் மூலம் அரசுக்கு வரவேண்டிய ரூ.19 லட்சத்து 42 ஆயிரத்து 171 வரை அரசுக்குச் செலுத்தாமல் நிதியிழப்புச் செய்துள்ளாராம்.

இதேபோல், எல்லாபுரம் ஊராட்சி ஒன்றியம், தாமரைபாக்கம் ஊராட்சித் தலைவராக து.கீதா என்பவா் உள்ளாா். இவரும் சட்ட விதிமுறைகளை மீறி அரசுக்குச் செலுத்த வேண்டிய ரூ.40 லட்சம் வரையில் நிதியிழப்புச் செய்துள்ளாராம்.

இதனால், தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 பிரிவு 205 (11)-இல் ஊராட்சிகளின் ஆய்வாளா் மற்றும் மாவட்ட ஆட்சியருக்கு வழங்கியுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி வெங்கத்தூா் ஊராட்சித் தலைவா் பா.சுனிதா, தாமரைபாக்கம் ஊராட்சி தலைவா் து.கீதா ஆகியோரை 31.1.2024 முதல் ஊராட்சித் தலைவா் பதவியிலிருந்து நீக்கம் செய்து அவா் உத்தரவிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com