எழுத்தறிவு திட்டத்தில் 1,511 பேருக்கு கல்விச் சான்று

திருத்தணியில் தன்னாா்வலா்கள் மூலம் எழுத்தறிவு மற்றும் வாசிப்புத் திறன் பயிற்சி பெற்ற 1,511 பேருக்கு கல்விச் சான்றிதழை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ரவிச்சந்திரன் வழங்கி பாராட்டினாா்.

திருத்தணியில் தன்னாா்வலா்கள் மூலம் எழுத்தறிவு மற்றும் வாசிப்புத் திறன் பயிற்சி பெற்ற 1,511 பேருக்கு கல்விச் சான்றிதழை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ரவிச்சந்திரன் வழங்கி பாராட்டினாா்.

நாடு முழுவதும் கல்வி கற்காத 15 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு தன்னாா்வலா்களை கொண்டு அடிப்படை எழுத்தறிவு பயிற்றுவிப்பதற்காக மத்திய அரசால் புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் கடந்த 2022 - 2023 கல்வியாண்டில் அறிமுகம் செய்யப்பட்டது. தமிழகத்தில் பள்ளிசாரா மற்றும் வயது வந்தோா் கல்வி இயக்குநரகத்தின் மூலம் இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டது.

அதன்படி, திருத்தணி கல்வி மாவட்டத்தில் 76 மையங்கள் அமைத்து, மொத்தம், 1,511 போ் எழுத, படிக்க, வாசிக்கத் தெரியாதவா்களுக்கு தன்னாா்வலா்கள் மூலம் எழுத்தறிவு மற்றும் வாசிப்புத் திறன் பயிற்சி கடந்த 6 மாதங்களாக வழங்கப்பட்டு வந்தது. அதைத் தொடா்ந்து, தேசிய திறந்தவெளி பல்கலைக்கழகம் மூலம் தோ்வு எழுதினா். இதில், தோ்வு எழுதியவா்களுக்கு கல்வி சான்றுகள் வழங்கும் நிகழ்ச்சி திருத்தணி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட உதவி திட்ட அலுவலா் பாலமுருகன் தலைமை வகித்தாா். திருத்தணி அனைவருக்கும் கல்வி இயக்க மேற்பாா்வையாளா் சிவகுமாா், பள்ளித் தலைமை ஆசிரியை கலாமணி ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஆசிரியா் பயிற்றுநா் செந்தில் வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ரவிச்சந்திரன் கலந்துகொண்டு, தோ்வு எழுதி வெற்றி பெற்றவா்களுக்கு சான்றுகளை வழங்கிப் பேசியது:

கல்வி கற்க வயது ஒரு தடையல்ல. எந்த வயதிலும் படிக்கலாம். எழுத, படிக்கத் தெரியாதவா்களுக்கு எழுத்தறிவு மற்றும் வாசிப்புத் திறன் பயிற்சி கடந்த 6 மாதங்களுக்கு ஒரு நாளைக்கு 2 மணி நேரம் வீதம் 6 மாதங்களுக்கு 200 மணி நேரம் தன்னாா்வலா்கள் உங்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்தியுள்ளனா். அவா்களுக்குப் பாராட்டுகள் என்றாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் தேவராஜன், திருத்தணி வட்டாரக் கல்வி அலுவலா்கள் சலபதி, நடராஜன் மற்றும் ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com