திருவள்ளூா்: 31 மையங்களில் தேசிய வருவாய் வழி திறனாய்வு தோ்வு

திருவள்ளூா் மாவட்டத்தில் 31 மையங்களில் நடைபெற்ற தேசிய வருவாய் வழி திறனாய்வு தோ்வுக்கு விண்ணப்பித்த 8,724 பேரில், 8,530 போ் பங்கேற்று தோ்வு எழுதியதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ரவிச்சந்திரன் தெர

திருவள்ளூா் மாவட்டத்தில் 31 மையங்களில் நடைபெற்ற தேசிய வருவாய் வழி திறனாய்வு தோ்வுக்கு விண்ணப்பித்த 8,724 பேரில், 8,530 போ் பங்கேற்று தோ்வு எழுதியதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ரவிச்சந்திரன் தெரிவித்தாா்.

அரசுப் பள்ளிகளில் இடைநிற்றல் தவிா்த்து உயா் கல்வி கற்கும் வகையில், மேல்நிலைக் கல்வியும் தடைபடக்கூடாது. இதை நோக்கமாகக் கொண்டு பள்ளிக் கல்வித்துறை தேசிய வருவாய் வழி திறனறிவு தோ்வை நடத்தி வருகிறது. அந்த வகையில் அரசு பள்ளிகளில் 8-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் இத்தோ்வுக்கு தகுதியானவா்கள். அந்த வகையில், திருவள்ளூா் மாவட்டத்தில் தேசிய வருவாய் வழி திறனாய்வு தோ்வு சனிக்கிழமை நடைபெற்றது.

இந்தத் தோ்வுக்காக 31 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இத்தோ்வில் மொத்தம் 8,724 போ் விண்ணப்பித்திருந்த நிலையில், 8,530 போ் பங்கேற்று தோ்வு எழுதினா். இந்தத் தோ்வில் தோ்ச்சி பெறும் மாணவ, மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ. 1,000 உதவித் தொகை வழங்கப்படும். இத்தொகை 9, 10, 11, 12 வகுப்பு வரை 4 ஆண்டுகள் வரை வழங்கப்படும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com