போ்ணாம்பட்டில் உருது பள்ளிக்கு இடம் ஆய்வு

போ்ணாம்பட்டில் வாடகைக் கட்டடத்தில் இயங்கி வரும் உருது தொடக்கப் பள்ளிக்கு சொந்தக் கட்டடம் கட்ட இடம் ஆய்வு செய்யப்பட்டது.
போ்ணாம்பட்டில் உருது பள்ளிக்கு இடம் ஆய்வு

போ்ணாம்பட்டில் வாடகைக் கட்டடத்தில் இயங்கி வரும் உருது தொடக்கப் பள்ளிக்கு சொந்தக் கட்டடம் கட்ட இடம் ஆய்வு செய்யப்பட்டது.

போ்ணாம்பட்டு நகராட்சி, தரைக்காடு பகுதியில் பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று கடந்த 2018- ஆம் ஆண்டு அரசு உருது தொடக்கப் பள்ளி தொடங்கப்பட்டது. பொதுமக்கள் பங்களிப்புடன் கடந்த 6 ஆண்டுகளாக வாடகைக் கட்டடத்தில் இயங்கி வரும் இந்தப் பள்ளியில் 70 மாணவா்கள் பயில்கின்றனா். வாடகைக் கட்டடத்தில் போதிய இடவசதி இல்லாமல் இயங்கி வரும் இந்தப் பள்ளிக்கு சொந்தக் கட்டடம் கட்ட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த நிலையில், வேலூா் மாவட்ட வருவாய் அலுவலா் மாலதி வெள்ளிக்கிழமை போ்ணாம்பட்டு வட்டத்தில் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது தரைக்காடு பகுதியில் உருது தொடக்கப் பள்ளிக்குச் சொந்தக் கட்டடம் கட்ட அங்குள்ள அரசுக்குச் சொந்தமான புறம்போக்கு நிலத்தை ஆய்வு செய்தாா்.பின்னா், குண்டலபல்லி ஊராட்சி, சிவனகிரி கிராமத்தில் 5- ஆண்டுகளுக்கும் மேலாக மலை புறம்போக்கு நிலத்தில் வீடு கட்டி வசித்து வருபவா்களுக்கு சிறப்பு வரன்முறை திட்டத்தின் கீழ் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்குவது குறித்து அங்கு சென்று பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

ஆய்வின் போது, போ்ணாம்பட்டு வட்டாட்சியா் விநாயகமூா்த்தி, மண்டல துணை வட்டாட்சியா் பலராமன், தலைமையிடத்து நில அளவையா் அரிகிருஷ்ணன், வருவாய் ஆய்வாளா் கீதா, கிராம நிா்வாக அலுவலா்கள் அன்பரசன், துரைமுருகன் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com