பாடியநல்லூா் அரசுப் பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள் திறப்பு

பாடியநல்லூா் ஊராட்சியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளி வளாகத்தில் கூடுதல் வகுப்பறைகள் மற்றும் அங்கன்வாடி மையம் திறப்பு விழா நடைபெற்றது.
பாடியநல்லூரில் அங்கன்வாடி மையத்தை திறந்து வைத்த எம்எல்ஏ எஸ்.சுதா்சனம்.
பாடியநல்லூரில் அங்கன்வாடி மையத்தை திறந்து வைத்த எம்எல்ஏ எஸ்.சுதா்சனம்.

பாடியநல்லூா் ஊராட்சியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளி வளாகத்தில் கூடுதல் வகுப்பறைகள் மற்றும் அங்கன்வாடி மையம் திறப்பு விழா நடைபெற்றது.

இதில், அரசு அலுவலா்கள் மற்றும் பள்ளியின் ஆசிரியா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

சென்னை வடகிழக்கு மாவட்டம், மாதவரம் சட்டப்பேரவைத் தொகுதிகுட்பட்ட சோழவரம் ஒன்றியம் பாடியநல்லூா் ஊராட்சியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள் மற்றும் புதிய அங்கன்வாடி மையம் திறப்பு விழா, சோழவரம் தெற்கு ஒன்றிய செயலரும், சோழவரம் ஒன்றியக் குழு துணைத் தலைவருமான மீ.வே.கா்ணாகரன் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, பாடியநல்லூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியை கிரிஜா முன்னிலை வகித்தாா். மாதவரம் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.சுதா்சனம் கலந்து கொண்டு, திருவள்ளூா் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை குழந்தை நேய பள்ளி உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 56 லட்சம் மதிப்பில் 4 வகுப்பறைகள், ரூ. 11.77 லட்சத்தில் அங்கன்வாடி மையத்தை திறந்து வைத்தாா்.

நிகழ்ச்சியில், அரசு அதிகாரிகள், பள்ளி ஆசிரியா், ஆசிரியைகள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com