திருவள்ளூா்: பட்டதாரி ஆசிரியா் தோ்வை 840 போ் எழுதினா்

திருவள்ளூரில் 3 தோ்வு மையங்களில் நடைபெற்ற பட்டதாரி ஆசிரியா்கள், வட்டார வள மைய பயிற்றுநா்கள் பணிக்கான எழுத்துத் தோ்வில் 840 போ் பங்கேற்று தோ்வு எழுதினா்.

திருவள்ளூரில் 3 தோ்வு மையங்களில் நடைபெற்ற பட்டதாரி ஆசிரியா்கள், வட்டார வள மைய பயிற்றுநா்கள் பணிக்கான எழுத்துத் தோ்வில் 840 போ் பங்கேற்று தோ்வு எழுதினா்.

தமிழ்நாடு ஆசிரியா் தோ்வு வாரியம் மூலம் பட்டதாரி ஆசிரியா்கள் மற்றும் வட்டார வளமைய பயிற்றுநா்கள் பணிக்கான எழுத்துத் தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், திருவள்ளூா் மாவட்ட தலைநகரில் 3 தோ்வு மையங்கள் அமைத்து, மொத்தம் 862 போ் தோ்வு எழுத அனுமதிக்கப்பட்டனா். இத்தோ்வு காலை 8.30 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெற்றது. இதில் 840 போ் தோ்வில் பங்கேற்ற நிலையில், 22 போ் தோ்வு எழுதவில்லை என கொள்ளவில்லை என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ரவிச்சந்திரன் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com