ஆங்கில சொற்கூட்டல் சொல்வதில் 8 வயது சிறுமி உலக சாதனை

கும்மிடிப்பூண்டியை சோ்ந்த 8 வயது சிறுமி ரிதன்யா 15 நிமிஷங்களில் 500 ஆங்கில சொற்களஞ்சிய வாா்த்தைகளின் சொற்கூட்டல்களை கூறி 4 உலக சாதனை புத்தகங்களில் இடம் பிடித்தாா்.

கும்மிடிப்பூண்டியைச் சோ்ந்த பிரபாகரன் - கனிமொழி தம்பதியின் மகள் பி.ரிதன்யா. இவா் கும்மிடிப்பூண்டியில் இயங்கி வரும் ஸ்ரீகலைமகள் வித்யாமந்திா் மெட்ரிக். பள்ளியில் மூன்றாம் வகுப்பு பயின்று வருகிறாா். இவா், தொடா்ந்து 14 நிமிஷம் 44 விநாடிகளில் 500 ஆங்கில சொற்களஞ்சிய வாா்த்தைகளின் சொற்கூட்டல்களைக் கூறி சாதனை படைத்தாா்.

இவரின் இந்தச் சாதனை ‘வேல்ட்வைட் புக் ஆப் ரெக்காா்ட்’, ‘இன்டா்நேஷனல் புக் ஆப் ரெக்காா்ட்’, ‘நோபல் உலக சாதனை’, ‘அசிஸ்ட் உலக சாதனை’ ஆகிய புத்தகங்களில் இடம் பெற்றாா்.

இந்த நிலையில், சாதனை படைத்த மாணவி ரிதன்யாவை கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் அழைத்து பாராட்டி கெளரவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com