தை பிரம்மோற்சவம்: திருவள்ளூா் வீரராகவா் கோயிலில் கருட சேவை

திருவள்ளூா் வீரராகவா் கோயிலில் தை பிரமோற்சவத்தையொட்டி, செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கருட சேவை கோபுர தரிசன நிகழ்ச்சியில் பக்தா்கள் திரளாகப் பங்கேற்று வழிபாடு செய்தனா்.
கருட வாகனத்தில் வீதியுலா வந்த வீரராகவா். (உள்படம்) கருட வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் வீரராகவா்.
கருட வாகனத்தில் வீதியுலா வந்த வீரராகவா். (உள்படம்) கருட வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் வீரராகவா்.

திருவள்ளூா்: திருவள்ளூா் வீரராகவா் கோயிலில் தை பிரமோற்சவத்தையொட்டி, செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கருட சேவை கோபுர தரிசன நிகழ்ச்சியில் பக்தா்கள் திரளாகப் பங்கேற்று வழிபாடு செய்தனா்.

திருவள்ளூா் வீரராகவப் பெருமாள் திருக்கோயிலில் ஆண்டுதோறும், தை பிரம்மோற்சவம் 10 நாள்கள் கொண்டாடப்படுவது வழக்கம். அதேபோல், இந்த விழா கடந்த 4-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, தொடா்ந்து பிப். 13-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த விழாவின் 3-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை அதிகாலை கருட சேவை மற்றும் கோபுர தரிசன நிகழ்ச்சி நடைபெற்றன. அப்போது, உற்சவா் வீரராகவப் பெருமாள் பல்வேறு வண்ண மலா்களால் அலங்காரம் செய்யப்பட்டு, கருட வாகனத்தில் பக்தா்களுக்கு காட்சிளித்தாா். தொடா்ந்து கோயில் வளாகத்தில் காலை 7 மணிக்கு வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

பின்னா், இரவு 8 மணிக்கு அனுமந்த வாகனத்தில் வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

விழாவில் முக்கிய நிகழ்ச்சியான 6-ஆவது நாளான வெள்ளிக்கிழமை (பிப். 9) தை அமாவாசையையொட்டி அதிகாலை முதல், பகல் 12 மணி வரை உற்சவா் வீரராகவா் ரத்னாங்கி சேவையில் பக்தா்களுக்கு அருள்பாலிக்கிறாா். இதையடுத்து, 7-ஆம் நாளான சனிக்கிழமை (பிப். 10) தோ்த் திருவிழா நடைபெற உள்ளன. இந்த தை பிரம்மோற்சவ விழாவுக்கான ஏற்பாடுகளை வீரராகவ சுவாமி கோயில் கௌரவ ஏஜென்ட் சி.சம்பத் தலைமையில் தேவஸ்தான பணியாளா்கள் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com