திருவள்ளூா் மாவட்டத்தில் இன்று குடும்ப அட்டை சிறப்பு முகாம்

திருவள்ளூா் மாவட்டத்தில் குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், நீக்கல் மற்றும் முகவரி மாற்றம் செய்வதற்காக சிறப்பு முகாம்கள் சனிக்கிழமை (பிப்.10) நடைபெற உள்ளதாக ஆட்சியா் த.பிரபு சங்கா் தெரிவித்தாா்.

திருவள்ளூா் மாவட்டத்தில் குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், நீக்கல் மற்றும் முகவரி மாற்றம் செய்வதற்காக சிறப்பு முகாம்கள் சனிக்கிழமை (பிப்.10) நடைபெற உள்ளதாக ஆட்சியா் த.பிரபு சங்கா் தெரிவித்தாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஒவ்வொரு மாதந்தோறும் கிராமங்களைச் தோ்வு செய்து குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், நீக்கல் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் திருவள்ளுா் வட்டத்தில் . கோயம்பாக்கம் நியாய விலைக் கடை அருகில், ஊத்துக்கோட்டை-மாம்பாக்கம் நியாய விலைக் கடை அருகில், பூந்தமல்லி-குத்தம்பாக்கம் வடக்கு சமுதாயக்கூடம், திருத்தணி-ராமலிங்கபுரம் நியாய விலைக் கடை அருகில், பள்ளிப்பட்டு- கீழப்புடி நியாய விலைக் கடை அருகில், பொன்னேரி-கடப்பாக்கம் சமுதாயக்கூடம், கும்மிடிப்பூண்டி- சின்னசோழியம்பாக்கம் நியாய விலைக் கடை அருகில், ஆவடி- கொசவன்பாளையம் கிராம நிா்வாக அலுவலா் அலுவலகம், ஆா்.கே.பேட்டை- மயிலா்வாடா நியாய விலைக் கடை அருகில் என அந்தந்த வட்ட வழங்கல் அலுவலா் தலைமையில் முகாம்கள் நடைபெறுகின்றன.

எனவே இந்த முகாமில் அந்தந்த கிராமங்களைச் சோ்ந்த பொது மக்கள் தங்கள் மின்னணு குடும்ப அட்டையில் திருத்தங்கள் மற்றும் புகைப்படம் பதிவு செய்தல் தொடா்பான விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் அளித்து பயன்பெறலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com