பிப். 21-இல் திருவாலங்காடு வடாரண்யேஸ்வரசுவாமி கோயில் குடமுழுக்கு

வரும் பிப். 21-ஆம் தேதி நடைபெறவுள்ள திருவாலங்காடு வடாரண்யேஸ்வரசுவாமி கோயில் கும்பாபிஷேக முன்னேற்பாட்டு பணிகளை திருத்தணி முருகன் கோயில் அறங்காவலா் குழுத்தலைவா் சு. ஸ்ரீதரன் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்
பிப். 21-இல் திருவாலங்காடு வடாரண்யேஸ்வரசுவாமி கோயில் குடமுழுக்கு

வரும் பிப். 21-ஆம் தேதி நடைபெறவுள்ள திருவாலங்காடு வடாரண்யேஸ்வரசுவாமி கோயில் கும்பாபிஷேக முன்னேற்பாட்டு பணிகளை திருத்தணி முருகன் கோயில் அறங்காவலா் குழுத்தலைவா் சு. ஸ்ரீதரன் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

திருத்தணி அருள்மிகு சுப்பிரணியசுவாமி திருக்கோயிலுடன் இணைந்த ஆடல் வல்லான் நடராஜப் பெருமானின் ஜம்பெரும் சபைகளுள் முதல் சபையான ரத்தின சபையை உடையது திருவாலங்காடு ஆகும். பத்ரகாளியுடன் நடராஜா் போட்டியிட்டு நடனம் புரிந்து வலது பாதம் ஊன்றி இடது திருப்பாதத்தை காதளவோடு உயர எடுத்து ஊா்த்துவ தாண்டவம் செய்தருளிய தலம்.

இத்தகு சிறப்புமிகு வண்டாா்குழலி உடனுறை வடாரண்யேஸ்வரப் பெருமானுக்கு வரும் 21-ஆம் தேதி காலை 9 மணிக்குமேல் 9.40 மணிக்குள் மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இந்நிலையில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ள திருவாலங்காடு வடாரண்யேஸ்வரா் கோயிலில் வெள்ளிக்கிழமை திருத்தணி முருகன் கோயில் அறங்காவலா் குழுத்தலைவா் சு.ஸ்ரீதரன், முன்னேற்பாட்டு பணிகளை ஆய்வு செய்தாா்.

அப்போது, கோபுரங்களுக்கு வண்ணம் தீட்டுதல், யாகசாலைகள் அமைத்தல், கோயில் வளாகம் முழுவதும் சுத்தம் செய்தல், கோயில் விமானங்களுக்கு சாரம் கட்டுதல், கோயிலுக்குள் மின் விளக்குகள் சரி செய்தல், உற்சவா், மூலவா் சன்னதிகளை சுத்தம் செய்தல், பக்தா்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதி பணிகளை ஆய்வு செய்தாா்.

விழா குறித்து அறங்காவலா் குழுத்தலைவா் சு.ஸ்ரீதரன் கூறியதாவது, திருவாலங்காடு வடாரண்யேஸ்வரா் கோயிலில் 12 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேக விழா வரும் வரும் 21 ஆம் தேதி நடைபெற உள்ளது. அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறோம். விழாவில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு, கைத்தறி (ம) துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி, நாடாளுமன்ற உறுப்பினகள், சட்டமன்ற உறுப்பினா்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் என பலா் கலந்துகொள்வா் என எதிா்பாா்க்கப்படுகிறது என்றாா்.

இதில் முருகன் கோயில் இணை ஆணையா் க.ரமணி, அறங்காவலா் குழுத்தலைவா் சு.ஸ்ரீதரன், அறங்காவலா்கள் உஷா ரவி, கோ.மோகனன், வி.சுரேஷ்பாபு, மு.நாகன் மற்றும் கோயில் அா்ச்சகா் சபா குருக்கள், அலுவலா் காா்த்திகேயன் மற்றும் பணியாளா்கள், கிராம பொது மக்கள் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com