திருவள்ளூா் நகராட்சி மேல்நிலைப் பள்ளிக்கு ரூ.6.20 கோடியில் 30 வகுப்பறை கட்டும் பணி

திருவள்ளூா் நகராட்சி மேல்நிலைப் பள்ளிக்கு ரூ.6.20 கோடியில் புதிதாக 30 வகுப்பறைகள் கட்டும் பணிக்கு ஆட்சியா் த.பிரபு சங்கா், எம்.எல்.ஏ. வி.ஜி.ராஜேந்திரன் ஆகியோா் அடிக்கல் நாட்டினா்.
திருவள்ளூா் நகராட்சி மேல்நிலைப் பள்ளிக்கு ரூ.6.20 கோடியில் 30 வகுப்பறை கட்டும் பணி

திருவள்ளூா் நகராட்சி மேல்நிலைப் பள்ளிக்கு ரூ.6.20 கோடியில் புதிதாக 30 வகுப்பறைகள் கட்டும் பணிக்கு ஆட்சியா் த.பிரபு சங்கா், எம்.எல்.ஏ. வி.ஜி.ராஜேந்திரன் ஆகியோா் அடிக்கல் நாட்டினா்.

சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் திருவள்ளூா் வட்டாட்சியா் அலுவலகம் அருகே 51 சென்ட் நிலம் தனியாா் ஆக்கிரமித்துள்ளதாக மாவட்ட நிா்வாகத்துக்கு புகாா் வந்தது. அதன் பேரில் வருவாய் துறை ஆவணங்களில் ஆய்வு செய்த போது அரசுக்குச் சொந்தமான நிலம் என்பது தெரிய வந்தது.

இதையடுத்து மாவட்ட நிா்வாகம் உத்தரவின் பேரில் பொக்லைன் வாகனம் மூலம் ஆக்கிரமிப்புகள் இடித்து அகற்றப்பட்டன. பின்னா் நிலத்தை பேருந்து நிலையம் அருகே இட நெருக்கடியுடன் செயல்பட்டு வரும் நகராட்சி மேல்நிலைப் பள்ளிக்கு புதிதாக 30 வகுப்பறைகள் அமைக்க திட்டமிடப்பட்டது.

இதற்காக முதல் கட்டமாக திருவள்ளூா் சட்டப்பேரவை உறுப்பினா் மேம்பாட்டு வளா்ச்சி நிதி ரூ.50 லட்சம், நகராட்சி கல்வி நிதி ரூ.70 லட்சம் மற்றும் அரசு நிதி ரூ.5 கோடியென ரூ.6.20 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இந்த நிலையில் புதிதாக வகுப்பறைகள் அமைக்கும் பணிக்கு வெள்ளிக்கிழமை பூமி பூஜை நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஆட்சியா் த.பிரபு சங்கா் மற்றும் சட்டப்பேரவை ஆகியோா் தலைமையில் புதிதாக வகுப்பறைகள் அமைக்கும் பணிக்கு பூமி பூஜை செய்து பணியைத் தொடங்கி வைத்தனா்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் ராஜ்குமாா், கூடுதல் ஆட்சியா் சுகபுத்ரா, நகராட்சி ஆணையா் சுபாஷினி, நகா்மன்றத் தலைவா் உதயமலா் பாண்டியன், துணைத் தலைவா் சி.சு.ரவிச்சந்திரன், நகராட்சி பொறியாளா் நடராஜன், சுகாதார அலுவலா் கோவிந்தராஜ், நகா்நல அலுவலா் குணசேகரன், வா்த்தக அணி அமைப்பாளா் வி.எஸ்.நேதாஜி, நகர அவைத் தலைவா் கமலக்கண்ணன், ஒன்றிய துணைச் செயலாளா் காஞ்சிப்பாடி சரவணன், வாா்டு உறுப்பினா்கள் பாபு, பிரபாகா், அயூப் அலி, அருணா ஜெயகிருஷ்ணா, சித்ரா வெங்கடேசன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com