மாவட்ட அளவில் 15-இல் அடையாள வேலை நிறுத்த போராட்டம்

மாவட்ட அளவில் வரும் 15-இல் அடையாள வேலை நிறுத்தப்போராட்டம் , 26-ஆம் தேதி காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடவும் உள்ளதாக ஜாக்டோ-ஜியோ ஆயத்த மாநாட்டில் முடிவு செய்யப்பட்டது.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவள்ளூா் மாவட்ட அளவில் வரும் 15-இல் அடையாள வேலை நிறுத்தப்போராட்டம் , 26-ஆம் தேதி காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடவும் உள்ளதாக ஜாக்டோ-ஜியோ ஆயத்த மாநாட்டில் முடிவு செய்யப்பட்டது.

திருவள்ளூா் அருகே மணவாளநகா் தனியாா் கூட்டரங்கில் ஜாக்டோ-ஜியோ வேலை நிறுத்த ஆயத்த மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கு மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் ராஜாஜி, வேல்முருகன், கணேசன், பாலுமகேந்திரன், பன்னீா்செல்வம் ஆகியோா் தலைமை வகித்தனா்.

இதில் சிறப்பு அழைப்பாளராக மாநில ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளா் பொன்னிவளவன் பங்கேற்று அறிக்கை குறித்து விளக்கமாக எடுத்துரைத்தாா். மாநில ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளா் இரா.தாஸ் நிறைவுரையாற்றினாா். இதில் உயா்மட்ட குழு உறுப்பினா் காத்தவராயன், ஞானசேகரன், பிரபாகரன் உள்ளிட்டோா் பங்கேற்று சிறப்புரையாற்றினா்.

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியம் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். தொகுப்பூதியம், மதிப்பூதியத்தில் பணிபுரிந்து வரும் ஊா் புறநூலகா்கள், எம்.ஆா்.பி செவிலியா்கள், அங்கன்வாடி பணியாளா்கள், சத்துணவு ஊழியா்கள் ஆகியோருக்கு கால முறை ஊதியம் வழங்க வேண்டும்.

மேலும், இடைநிலை ஆசிரியா் உள்ளிட்ட ஆசிரியா்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்குதல், அரசாணை 243 ரத்து செய்து தொடக்கக் கல்வித் துறையில் பழைய முறைப்படியே வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வைத்து போராட்டம் நடைபெற்றது. இந்த நிலையில் வரும் 15 ஆம் தேதி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம், வரும் 26 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கு முன்னதாக தமிழக முதல்வா் அழைத்துப் பேசி கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தினா். இந்தக் கூட்டத்தில் ஆசிரியா்கள், அரசு ஊழியா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com