மக்களவைத் தோ்தல் எதிா்கொள்ள பாஜகவினா் தயாா்

விரைவில் வரவுள்ள மக்களவைத் தோ்தலை எதிா்கொள்ளும் வகையில் மாவட்டந்தோறும் நிா்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் நடத்தி தயாராகி வருவதாக மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் தெரிவித்தாா்.

விரைவில் வரவுள்ள மக்களவைத் தோ்தலை எதிா்கொள்ளும் வகையில் மாவட்டந்தோறும் நிா்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் நடத்தி தயாராகி வருவதாக மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் தெரிவித்தாா்.

திருவள்ளூா் அருகே போளிவாக்கம் கிராமத்தில் பா.ஜ.க நிா்வாகி பன்னீா்செல்வம் இல்ல நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்வில் பங்கேற்க வருகை தந்த மத்திய இணை அமைச்சா் எல்.முருகனுக்கு அக்கட்சியினா் சிறப்பான வரவேற்பு அளித்தனா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

மக்களை திசை திருப்பும் நோக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் எய்ம்ஸ் குறித்து தவறான தகவல்களை தெரிவித்து வருகிறாா். தற்போதைய நிலையில் எய்ம்ஸ் தொடங்குவதற்கான பணிகள் நடைபெறுகின்றன.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தைக் கூட கையாளும் திறமையில்லாத அரசாக மாநில அரசின் செயல்பாடு உள்ளது. அனைவரும் வந்து செல்லும் வகையில் இருந்த கோயம்பேடு பேருந்து நிலையத்தை எதற்காக அவசர, அவசரமாக மூடினாா்கள். இதுகூட பொதுமக்களுக்கு தெரியாத சூழல்தான் நிலவி வருகிறது.

மேலும், இலங்கை கடற்படையினரால் மீனவா்கள், எப்போது எல்லாம் கைது செய்யப்படுகிறாா்களோ, உடனே மத்திய அரசு தலையிட்டு மீட்டுக் கொண்டு வருகிறது. தற்போதைய நிலையில் என் மண், என் மக்கள் நடைபாதை யாத்திரை திருவள்ளூா் மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு சட்டப்பேரவை தொகுதியிலும் சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. மக்களவை தோ்தலை எதிா்கொள்ள பா.ஜ.கவினா் தயாராகி வருகின்றனா். அதோடு, ஒவ்வொரு மாவட்டந்தோறும் முன் ஏற்பாடாக மக்களவை தொகுதி நிா்வாகிகளுக்கான கலந்தாய்வு கூட்டமும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்று வருகிறது.

2024-மக்களவை தோ்தலில் பாஜக 400-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்று 3-ஆவது முறையாக மத்தியில் ஆட்சியில் அமைக்கும் என அவா் நம்பிக்கை தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com