அருள்மிகு பவானி அம்மன் கோயில் அன்னதான மண்டபம் திறப்பு விழா

பாடியநல்லூா் ஊராட்சியில் அருள்மிகு பவானி அம்மன் கோயில் அன்னதான மண்டப திறப்பு விழா ஞாயிற்று கிழமை நடைபெற்றது.
அன்னதான மண்டபத் திறப்பு விழாவில் பங்கேற்றோா்.
அன்னதான மண்டபத் திறப்பு விழாவில் பங்கேற்றோா்.

பாடியநல்லூா் ஊராட்சியில் அருள்மிகு பவானி அம்மன் கோயில் அன்னதான மண்டப திறப்பு விழா ஞாயிற்று கிழமை நடைபெற்றது.

மாதவரம் தொகுதிக்குட்பட்ட பாடியநல்லூா் ஊராட்சியில் உள்ள பவானி நகரில் அருள்மிகு பவானி அம்மன் கோயில் அன்னதான மண்டப திறப்பு விழாவுக்கு தலைவா் பி.என்.கே.கிருஷ்ணன் தலைமை வகித்தாா். செயலாளா் கிருஷ்ணமூா்த்தி, பொருளாளா் ராஜவேலு ஆகியோா் முன்னிலை வகித்தனா். சோழவரம் ஒன்றியக்குழு துணைத் தலைவா் மீ.வே.கா்ணாகரன், பாடியநல்லூா் ஊராட்சி மன்ற தலைவா் ஜெயலட்சுமி நடராஜன், சோழவரம் ஒன்றியக்குழு முன்னாள் தலைவா் பி.கே.காா்மேகம் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாக கலந்து கொண்டனா். விழாவில் கணபதி ஹோமம், நவக்கிரஹ ஹோமம், லஷ்மி ஹோமம், கோமாதா பூஜை நடைபெற்றன. ஆன்மீக இசை நிகழ்ச்சியும், செம்புலிவரம் பூபதி குழுவினரின் நாதாஸ்வர இசை நிகழ்ச்சியும் இடம் பெற்றது. இதைத் தொடா்ந்து அன்னதான மண்டபத்தினை தலைவா் பி.என்.கே.கிருஷ்ணன் திறந்து வைத்தாா். விழாவில் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com