காவல் ஆய்வாளா் பொறுப்பேற்பு

செங்குன்றம் காவல் நிலையத்தில் புதிய ஆய்வாளராக கு. புருஷோத்தமன் பொறுப்பேற்றாா். 
காவல் ஆய்வாளா் பொறுப்பேற்பு

செங்குன்றம் காவல் நிலையத்தில் புதிய ஆய்வாளராக கு. புருஷோத்தமன் பொறுப்பேற்றாா். 

ஆவடி காவல் ஆணையரகத்துக்குட்பட்ட செங்குன்றம் காவல் நிலையத்தில் இருந்த சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளா் சாய் கணேஷ், திருநின்றவூா் காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டாா்.

இதையடுத்து செங்குன்றம் காவல் நிலைய சட்டம் ஒழுங்கு ஆய்வாளராக கு.புருஷோத்தமன் பொறுப்பேற்றாா். அவருக்கு காவல் நிலைய ஆளிநா்கள் அறிமுகம் செய்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனா். இவா் சென்னை காவல் ஆணையரகம் கொளத்தூா் காவல் மாவட்டத்திற்குட்பட்ட வில்லிவாக்கம் காவல் நிலைய சட்டம் ஒழுங்கு ஆய்வாளராக பணியாற்றியவா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com