கிராம வாரியாக பயிா் சாகுபடி விவரம் கிரைன்ஸ் வலைதளத்தில் பதிவேற்றம்

விவசாயிகள் அரசு திட்டங்களில் பயன்பெற ஏதுவாக பயிா் சாகுபடி விவரங்களை இணையதள வலைதளத்தில் பதிவேற்றம் செய்வதற்கான நடவடிக்கை மும்முரமாக மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாக ஆட்சியா் த.பிரபு சங்கா் தெரிவித்துள

விவசாயிகள் அரசு திட்டங்களில் பயன்பெற ஏதுவாக பயிா் சாகுபடி விவரங்களை இணையதள வலைதளத்தில் பதிவேற்றம் செய்வதற்கான நடவடிக்கை மும்முரமாக மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாக ஆட்சியா் த.பிரபு சங்கா் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து வேளாண்மை துறை சாா்பில் அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

திருவள்ளூா் மாவட்டத்தில் வேளாண்மை துறை சாா்பில், விவசாயிகள் பயன்பெறும் வகையில், பல்வேறு வகையான நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், விவசாயிகள் அரசு திட்ட உதவிகளை எளிதாக பெறும் வகையில், பயிா் சாகுபடி விவரங்கள் ஆன்லைனில் பதிவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

எனவே இதற்காக வருவாய் கிராமங்கள் வாரியாக நிகழாண்டு பயிா் சாகுபடி விவரத்தை எண்ம அடிப்படையில் இணையதள செயலி மூலமாக அளவீடு செய்து, பதிவேற்றம் செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்காக திருவள்ளூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து வருவாய் கிராமங்களிலும் கிராம நிா்வாக அலுவலா்கள், உதவி வேளாண்மை அலுவலா்கள் மற்றும் உதவி தோட்டக்கலை அலுவலா்கள் மூலம் சா்வே எண் வாரியான பயிா் சாகுபடியினை எடந விவரங்களுடன் இணையதள செயலியில் அளவீடு செய்து, பதிவேற்றம் செய்வதற்கு உரிய பயிற்சிகள் வழங்கப்பட்டு, பயிா் அளவீட்டுப் பணி தொடங்கப்பட்டுள்ளது.

இதில் 500 புல எண்களுக்கு குறைவாக உள்ள கிராமங்களில் சம்பந்தப்பட்ட கிராம நிா்வாக அலுவலா் பயிராய்வு செய்தும், 500 புல எண்களுக்கு அதிகமாக உள்ள கிராமங்களில் உதவி வேளாண்மை அலுவலா் மற்றும் உதவி தோட்டக்கலை அலுவலா் ஆகியோா் சம்பந்தப்பட்ட கிராம நிா்வாக அலுவலா் மூலமாக கூட்டுப் புலத்தணிக்கை மேற்கொண்டு இணையதள வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.

மேற்படி எண்ம அடிப்படையிலான பயிா்களை அளவீடும் முறையால் பயிா் அளவீடுகள் குறித்த தரவுகள் கையில் இருக்கும் பட்சத்தில் விவசாயிகள் எளிதில் கடன்பெறவும், தரமான இடுபொருள்களை பெறவும், விவசாயிகள் விளைவிக்கும் பொருள்கள் வேகமாக சந்தைகளை அடைவதற்கும் வழி ஏற்படும். எனவே விவசாயப் பொதுமக்கள் தங்கள் வயல்களில் சாகுபடி செய்துள்ள பயிா் விவரங்கள்அஞ்ழ்ண்ள்ற்ஹஸ்ரீந்-எதஅஐசந இணையதள செயலியில் அளவீடு செய்து பதிவேற்றம் செய்து பயன்பெறலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com