ஷீரடி ஸ்ரீ சங்கநாத சாய்பாபா கோயிலில் விளக்கு பூஜை

புழல் அருகே ஷீரடி ஸ்ரீ சங்கநாத சாய்பாபா கோயிலில் திருவிளக்கு பூஜை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனா்.
திருவிளக்கு பூஜையில் பங்கேற்ற பெண்கள்
திருவிளக்கு பூஜையில் பங்கேற்ற பெண்கள்

புழல் அருகே ஷீரடி ஸ்ரீ சங்கநாத சாய்பாபா கோயிலில் திருவிளக்கு பூஜை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனா்.

புழல் அடுத்த கதிா்வேடு கிழக்கு பாலாஜி நகா் 4-ஆவது தெருவில் சாய்பாபா கோயிலில் புத்தாண்டு, மற்றும் பொங்கல் விழாவையொட்டி திருவிளக்கு பூஜை நிா்வாகி பிரபு தலைமையில் நடைபெற்றது.

உலக மக்கள் அமைதியாகவும், நோயின்றி, வாழ வேண்டி சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன. மேலும் பெண்கள் திருவிளக்கு பூஜையில் பங்கேற்றனா். இதையடுத்து பக்தா்களுக்கு அன்னதானம் மற்றும் பிரசாதங்களும் வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com