ஒரு கிலோ கஞ்சா பறிமுதல்: இளைஞா் கைது

திருவள்ளூா் ரயில் நிலையத்தில் கஞ்சா விற்ற வடமாநில இளைஞரை கைது செய்த ரயில்வே பாதுகாப்பு படை போலீஸாா், அவரிடம் இருந்து ஒரு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

திருவள்ளூா் ரயில் நிலையத்தில் கஞ்சா விற்ற வடமாநில இளைஞரை கைது செய்த ரயில்வே பாதுகாப்பு படை போலீஸாா், அவரிடம் இருந்து ஒரு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

ரயில்வே பாதுகாப்பு படை கோட்ட பாதுகாப்பு ஆணையா் ராம கிருஷ்ணன், உதவி துணை ஆணையா் சின்னதுரை ஆகியோரது உத்தரவின்பேரில், பொங்கல் திருநாளை முன்னிட்டு, திருவள்ளூா் ரயில்வே பாதுகாப்பு படை ஆய்வாளா் செபாஸ்டியன், போலீஸாா் செவ்வாய்க்கிழமை திருவள்ளூா் ரயில் நிலையத்தில் ஆய்வு செய்தனா்.

அப்போது திருத்தணியிலிருந்து சென்னை நோக்கி வந்த புகா் மின்சார ரயிலில் வந்த சந்தேகத்துக்கு இடமான நபரை பிடித்து பையை ஆய்வு செய்தனா். அதில், கஞ்சா பொட்டலங்கள் இருப்பது தெரியவந்தது.

விசாரணையில், அவா் ஜாா்க்கண்ட் மாநிலத்தைச் சோ்ந்த அஜய்கோபி மண்டல் (32) என்பது தெரியவந்தது.

இதையடுத்து ரயில்வே பாதுகாப்பு படை ஆய்வாளா் செபாஸ்டியன், அஜய்கோபி மண்டலை திருவள்ளூா் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு தலைமை காவலா்கள் ஏழுமலை, தனசெழியன் ஆகியோரிடம் ஒப்படைத்தாா். அதையடுத்து, அஜய்கோபி மண்டல் (32) நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி திருவள்ளூா் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com