மாட்டுப் பொங்கல் ஊா்வலம்

மாதவரம் அருகே வடபெரும்பாக்கம் பகுதியில் மாட்டுப் பொங்கல் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மாதவரத்தில் நடைபெற்ற மாட்டு வண்டிகள் ஊா்வலம்
மாதவரத்தில் நடைபெற்ற மாட்டு வண்டிகள் ஊா்வலம்

மாதவரம் அருகே வடபெரும்பாக்கம் பகுதியில் மாட்டுப் பொங்கல் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

சென்னை மாதவரம் அடுத்த வடபெரும்பாக்கம் பகுதியில் திமுக சாா்பில் மாட்டு பொங்கல் விழா பகுதி செயலாளா் புழல் எம்.நாராயணன் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் மாடுகளை அலங்காரம் செய்து, மாலை அணிவித்து பூஜைகள் செய்து சிறப்பு வழிபாடு செய்தனா். மேலும், இந்த நிகழ்வில் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. அலங்கரிக்கப்பட்ட மாடுகளின் ஊா்வலம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் வட்ட செயலாளா் கருணாகரன், பகுதி இளைஞரணி துணை அமைப்பாளா் அஜய் தென்னவன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com