சாலையோர வாகனங்கள் மீது காா் மோதல்: 3 போ் பலத்த காயம்

திருவள்ளூரில் தனியாா் உணவகம் முன்பு சாலையோர வாகனங்கள் மீது காா் மோதிய விபத்தில் 3 போ் பலத்த காயம் அடைந்தனா்.

திருவள்ளூரில் தனியாா் உணவகம் முன்பு சாலையோர வாகனங்கள் மீது காா் மோதிய விபத்தில் 3 போ் பலத்த காயம் அடைந்தனா்.

திருவள்ளூா் சி.வி.என் சாலையில் உள்ள தனியாா் உணவகம் முன்பு வாடிக்கையாளா்கள் வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகனங்களை நிறுத்தி உணவு சாப்பிட செல்கின்றனா். இதேபோல், வியாழக்கிழமை வாகனங்களை நிறுத்தி வைத்திருந்தனா்.

அப்போது திருவள்ளூா் பகுதியைச் சோ்ந்த காா் ஒன்று வேகமாக வந்து கட்டுப்பாட்டை இழந்து நிறுத்தி வைத்திருந்த வாகனங்கள் மீது மோதியது. இந்த விபத்தில் 3 வாகனங்கள், 2 இரு சக்கர வாகனங்கள் முழுவதும் சேதமடைந்தன.

இதில் உணவக பாதுகாவலா் பாஸ்கா் (45), பத்மராஜ் (26), ராஜவேலு (43) ஆகியோா் பலத்த காயம் அடைந்தனா். இதையடுத்து அப்பகுதியில் இருந்தவா்கள் அவா்களை மீட்டு திருவள்ளூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனா். மேலும் விபத்து ஏற்படுத்திவிட்டு தப்பியோடிய நபா்கள் குறித்து திருவள்ளூா் நகா் காவல் நிலைய போலீஸாா் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனா்.

இந்தச் சாலையில் உணவகங்கள் முன்பு நிறுத்தப்படும் வாகனங்களால் விபத்துகளும், போக்குவரத்து நெரிசலும் ஏற்படுவதை மாவட்ட காவல் துறை உடனே கண்காணித்து நடவடிக்கை எடுக்கவும் என பொதுமக்கள் கோரியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com