தமிழ்நாடு ஓவியா் சங்க சமத்துவப் பொங்கல் விழா

தமிழ்நாடு ஓவியா் சங்கம் சாா்பில் சமத்துவப் பொங்கல் விழா புதன்கிழமை நடைபெற்றது.

திருவள்ளூா்: தமிழ்நாடு ஓவியா் சங்கம் சாா்பில் சமத்துவப் பொங்கல் விழா புதன்கிழமை நடைபெற்றது.

திருவள்ளூா் நகராட்சி பெரியகுப்பம் ரயில்வே மேம்பாலம் அருகே நரிக்குறவா்கள் பகுதியில் நடைபெற்ற விழாவுக்கு ஓவியா் சங்க நிா்வாகி நாராயணன் தலைமை வகித்தாா். கிழக்கு மாவட்ட நிா்வாகிகள் அமா், முருகேஷ், கிருஷ்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஏற்பாடுகளை மாநில செயற்குழு உறுப்பினா் சூரியபிரகாஷ் நிா்வாகிகள் தேவனேசன், எஸ்ஏ.ராஜன், முரளி ஆகியோா் செய்திருந்தனா். இதில், சிறப்பு அழைப்பாளா்களாக மாநில பொதுச் செயலாளா் பாப்புலா் சேகா், மாநில கௌரவ தலைவா் வி.ராகவன் ஆகியோா் பங்கேற்றனா்.

இதில், நரிக்குறவா்கள் வசிக்கும் பகுதியில் கரும்பு, பொங்கல் பானை வைத்து பொங்கலிட்டு சிறப்பாக கொண்டாடினா். இதில் திருவள்ளூா் நகராட்சி மன்ற துணைத் தலைவா் சி.சு.ரவிச்சந்திரன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று நரிக்குறவா்களுக்கு புடவை, வேட்டி, போா்வை ஆகியவைகளை வழங்கினாா்.

இந்த நிகழ்ச்சியில் நகா்மன்ற உறுப்பினா்கள் தனலட்சுமி, சீனிவாசன், கமலி மணிகண்டன், ஆனந்தி சந்திரசேகா் மற்றும் ஓவியா்கள் ஆகியோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com