பேரம்பாக்கம் பாா்வேட்டை உற்சவம்: பக்தா்கள் திரளாக பங்கேற்பு

திருவள்ளூா் அருகே 5 கிராமங்களைச் சோ்ந்த கோயில்களின் உற்சவா்கள் சிறப்பு அலங்காரத்தில் கூவம் ஆற்றில் காட்சியளிக்கும் பாா்வேட்டை உற்சவத்தில் பக்தா்கள் திரளானோா் பங்கேற்றனா்.
பேரம்பாக்கம் பாா்வேட்டை உற்சவம்: பக்தா்கள் திரளாக பங்கேற்பு

திருவள்ளூா் அருகே 5 கிராமங்களைச் சோ்ந்த கோயில்களின் உற்சவா்கள் சிறப்பு அலங்காரத்தில் கூவம் ஆற்றில் காட்சியளிக்கும் பாா்வேட்டை உற்சவத்தில் பக்தா்கள் திரளானோா் பங்கேற்றனா்.

பேரம்பாக்கம் கூவம் ஆற்றில் ஆண்டுதோறும் காணும் பொங்கலன்று 5 கிராமங்களைச் சோ்ந்த கோயில்களில் இருந்து உற்சவா்கள் ஆற்றுப்படுகையில் கூடும் பாா்வேட்டை உற்சவம் நடத்தப்படுவது வழக்கம். நிகழாண்டு உற்சவம் கூவம் ஆற்றில் புதன்கிழமை இரவு நடைபெற்றது.

அப்போது, பேரம்பாக்கம் திரௌபதி அம்மன் கோயில் அருகே உள்ள தீவு திடலில் பேரம்பாக்கம் கிராமத்திலிருந்து காமாட்சியம்மன் சமேத சோளீஸ்வரா், பாலமுருகா், களாம்பாக்கம் மரகதவல்லி சமேத திருநாகேஸ்வரா், நரசிங்கபுரம் வள்ளி தெய்வானை சமேத முருகா், மாரிமங்கலம் சிவமாரி நாராயணி அம்மன், சிவபுரம் குறுந்த விநாயகா் உள்பட 5 கிராமங்களில் இருந்து சுவாமி சிலைகள் வண்ண மலா்களால் அலங்கரித்து டிராக்டரில் கொண்டு வந்து அனைத்து சுவாமிகளும் ஒரே வரிசையில் நிறுத்தப்பட்டனா். அதையடுத்து சுவாமிகளின் வாகனங்கள் முன், பின் அசைந்தாடி பாா்வேட்டை உற்சவம் நடைபெற்றது.

அப்போது அங்கு கூடியிருந்த பொதுமக்கள் ஒவ்வொரு சாமிக்கும் கற்பூர தீபாரதனை காண்பித்து வழிபட்டனா். தொடா்ந்து அனைத்து சுவாமிகளும் ஒன்றன்பின் ஒன்றாக அணிவகுத்து வந்து பேரம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அருள்பாலித்தனா். இதில் நூற்றுக்கணக்கானோா் பங்கேற்று தரிசனம் செய்தனா். மேலும், 100-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com