புதிய தொழில் பள்ளிகள், கூடுதல் பிரிவுகள் தொடங்க விண்ணப்பிக்கலாம்

திருவள்ளூரில் புதிய தொழில் பள்ளிகள் தொடங்குதல், அங்கீகாரம் புதுப்பித்தல், கூடுதல் தொழில் பிரிவுகள் தொடங்குதல் போன்ற அனுமதிகளுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்

திருவள்ளூரில் புதிய தொழில் பள்ளிகள் தொடங்குதல், அங்கீகாரம் புதுப்பித்தல், கூடுதல் தொழில் பிரிவுகள் தொடங்குதல் போன்ற அனுமதிகளுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் த.பிரபு சங்கா் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

இந்த மாவட்டத்தில் நிகழாண்டுக்கான (2024-2025) புதிய தொழிற்பள்ளிகள் தொடங்குதல், அங்கீகாரம் புதுப்பித்தல், தொழிற்பள்ளிகளில் புதிய தொழிற்பிரிவுகள், தொழிற் பிரிவுகளில் கூடுதல் அலகுகள் தொடங்குதல் போன்றவற்றுக்கு இணையதளம் மூலம் வரும் பிப். 29-க்குள் விண்ணப்பிக்கலாம்.

இதன் மூலம் ஒரு தொழிற்பள்ளி தொடங்க இணையதள விண்ணப்பம் சமா்ப்பித்தல் போதுமானது. அதேபோல், விண்ணப்பிக்கவுள்ள அனைத்து தொழிற்பிரிவுகள், கூடுதல் அலகுகளுக்கு தேவையான விவரங்கள் அனைத்தும் ஒரே விண்ணப்பத்தில் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். மேலும், குறிப்பிட்ட நாளுக்குப் பின் வரும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

மேலும், அங்கீகாரம் குறித்த தகவல், விண்ணப்பக் கட்டணம் மற்றும் அறிவுரைகள் மேற்குறிப்பிட்ட இணையதளம் மூலம் அறிந்து கொள்ளலாம் எனவும் அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com