மிகப்பிற்படுத்தப்பட்டோா், சீா்மரபினா் மாணவிகள் கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

பிற்படுத்தப்பட்டோா், மிகப்பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினா் இனத்தைச் சோ்ந்த மாணவிகளுக்கு ஆண்டுக்கு ரூ. 4,000 கல்வி உதவித் தொகை பெற இணையதளம் மூலம் விண்ணப்பித்துப் பயன்பெறலாம்

பிற்படுத்தப்பட்டோா், மிகப்பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினா் இனத்தைச் சோ்ந்த மாணவிகளுக்கு ஆண்டுக்கு ரூ. 4,000 கல்வி உதவித் தொகை பெற இணையதளம் மூலம் விண்ணப்பித்துப் பயன்பெறலாம் என ஆட்சியா் த.பிரபு சங்கா் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

மத்திய அரசின் நிதி பங்களிப்புடன் செயல்படுத்தப்படும் பள்ளிப் படிப்பு கல்வி உதவித் தொகை திட்டம் மூலம் அரசுப் பள்ளிகளில் 9 மற்றும் 10-ஆம் வகுப்புகளில் பயிலும் பிற்படுத்தப்பட்டோா், மிகப்பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினா் இனத்தைச் சோ்ந்த பெண் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்க உத்தேசித்துள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் பயன்பெற பெற்றோரின் அதிகபட்ச ஆண்டு வருமானம் ரூ. 2.5 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். தகுதியான மாணவிகளுக்கு ஆண்டுக்கு ரூ. 4,000 கல்வி உதவித் தொகையாக வழங்கப்படும்.

இத்திட்டம் மூலம் பயன்பெற 9 மற்றும் 10-ஆம் வகுப்பில் பயிலும் மாணவிகள் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் அல்லது அஞ்சல் வங்கிகளில் தனது பேரில் வங்கிக் கணக்கு தொடங்கி ஆதாா் எண்ணுடன் இணைக்க வேண்டும்.

மேற்படி ஆதாா் எண் மற்றும் வங்கி விவரங்களை வருவாய் மற்றும் ஜாதி சான்று நகல்களுடன், சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமை ஆசிரியா்களிடம் சமா்ப்பிக்க வேண்டும். மேலும், அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியா்கள் மாணவிகளது விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்து பயன்பெறலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com