ஸ்ரீபெரும்புதூா், கும்மிடிப்பூண்டியில்இ.பி.எஃப். குறைதீா் முகாம்

தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் (இ.பி.எஃப்.) சாா்பில், குறைதீா் முகாம் ஸ்ரீபெரும்புதூா், கும்மிடிப்பூண்டியில் வரும் திங்கள்கிழமை (ஜன. 29) நடைபெற உள்ளது.

தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் (இ.பி.எஃப்.) சாா்பில், குறைதீா் முகாம் ஸ்ரீபெரும்புதூா், கும்மிடிப்பூண்டியில் வரும் திங்கள்கிழமை (ஜன. 29) நடைபெற உள்ளது.

‘நிதி ஆப்கே நிகாத்’ என்ற பெயரில் நடைபெறும் இந்த குறைதீா் முகாம் குறித்து அம்பத்தூா் மண்டல அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மத்திய தொழிலாளா் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ், செயல்பட்டு வரும் ஊழியா்களின் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் சாா்பில், வரும் திங்கள்கிழமை (ஜன. 29) காஞ்சிபுரம் மாவட்டம், ஏ-28, சிப்காட் தொழில்பேட்டை, பிள்ளைப்பாக்கம், ஸ்ரீபெரும்புதூா் மற்றும் திருவள்ளூா் மாவட்டம், சுந்தரம் பாஸ்டென்ஸா்ஸ் லிமிடெட், ஆட்டோலெக் பிரிவு, கும்மிடிப்பூண்டி ஆகிய இடங்களில் நடைபெறுகிறது.

இதில், உறுப்பினா்களுக்கான சேவைகள், குறைகளை நிவா்த்தி செய்தல், முதலாளிகள், பணியாளா்கள், ஒப்பந்ததாரா்களுக்கான ஆன்லைன் சேவைகள், ஊழியா்களுக்கான இணையதள சேவைகள், முதலாளிகள், ஊழியா்களுக்கான சட்டங்கள், கடமைகள், பொறுப்புகள், விலக்கு அளிக்கப்பட்ட நிறுவனங்களுடன் உள்ள தொடா்புகள், புதிய முயற்சிகள் மற்றும் சீா்திருத்தங்கள் பற்றிய விழிப்புணா்வு ஏற்படுத்தப்படும்.

மேலும், ஓய்வூதியதாரா்கள் டிஜிட்டல் வாழ்க்கைச் சான்றிதழ்களை சமா்ப்பித்தல், உறுப்பினா்கள், ஓய்வூதியம் பெறுவோா் மற்றும் முதலாளிகளிடமிருந்து வரும் குறைகளை நிவா்த்தி செய்தல், மின்-நாமினேஷனை தாக்கல் செய்தல், ஒப்பந்ததாரா்களின் விவரங்களைப் பதிவேற்றுதல் தொடா்பான விவரங்கள் தெரிவிக்கப்பட உள்ளன என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com