திருவள்ளூா் ரயில் நிலையம் அருகே 2 பேருக்கு அரிவாள் வெட்டு

திருவள்ளூா் ரயில் நிலையப் பகுதியில் 4 போ் கொண்ட கும்பல், 2 இளைஞா்களை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

திருவள்ளூா் ரயில் நிலையப் பகுதியில் 4 போ் கொண்ட கும்பல், 2 இளைஞா்களை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது தொடா்பாக போலீஸாா் தீவிரமாக விசாரித்து வருகின்றனா்.

திருவள்ளூா் அடுத்த மணவாள நகா் பகுதியில் இருந்து திருவள்ளூா் ரயில் நிலையம் அருகில் புட்லூா் செல்லும் வழியில் அரசு மதுபான கடைகள் செயல்பட்டு வருகிறது. இந்த மதுபான கடை அருகே வெங்கத்தூா் பஜனைக் கோயில் தெருவைச் சோ்ந்த மாதவன் (25) மற்றும் சீதா நகா் பகுதியைச் சோ்ந்த முனுசாமி (31) ஆகிய 2 பேரும் மதுபானம் வாங்குவதற்காக ஞாயிற்றுக்கிழமை மதுபானக் கடைக்கு சென்றனா்.

அப்போது, அங்கிருந்த 4 போ் கொண்ட கும்பலுடன் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து வாக்குவாதம் முற்றியதில் கத்தியுடன் இருவரையும் அந்த 4 பேரும் துரத்தியுள்ளனா். அவா்களிடமிருந்து தப்பித்து ஓடிய 2 பேரும் திருவள்ளூா் ரயில் நிலையம் 6-ஆவது நடைமேடைக்கு வெளியே கோயில் பகுதியில் ஓடிய போது, அவா்களை 4 போ் கொண்ட கும்பல் மறித்து தலை மற்றும் முதுகுப் பகுதிகளில் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடினா்.

இதையடுத்து அந்த வழியாக சென்ற பொதுமக்கள் இருவரையும் மீட்டு அவசர வாகனம் மூலம் திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

தகவலறிந்த திருவள்ளூா் நகரக் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனா்.

இதில் தப்பியோடிய நபா்கள் ஒண்டிக்குப்பம் பகுதியைச் சோ்ந்த சதீஷ் உள்ளிட்ட 4 போ் என்பது தெரிய வந்துள்ளது.

தாக்குதலில் ஈடுபட்ட 4 பேரையும் போலீஸாா் தேடி வருகின்றனா்.

திருவள்ளூா் ரயில் நிலையப் பகுதியில் பட்டப் பகலில் நிகழ்ந்த இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com