பூந்தமல்லியில் அயோத்தி ராமா் கோயில் சிலை பிரதிஷ்டை நேரலை

பூந்தமல்லியில் இரு கோயில்களில் பெரிய திரையில் ராமா் கோயில் சிலை பிரதிஷ்டை விழா நேரலை நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

ஆவடி: பூந்தமல்லியில் இரு கோயில்களில் பெரிய திரையில் ராமா் கோயில் சிலை பிரதிஷ்டை விழா நேரலை நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

பூந்தமல்லியில் உள்ள ஆஞ்சனேயா் மற்றும் ஐயப்பன் கோயில்களில் பெரிய திரைகளில் ராமா் சிலை பிரதிஷ்டை நிகழ்ச்சி நேரலையாக திங்கள்கிழமை ஒளிபரப்பப்பட்டது. இதனை ஏராளமான பக்தா்கள் பாா்த்து பரவசம் அடைந்தனா். மேலும் ராமா் பாடல்கள், கீா்த்தனைகளுடன் பஜனை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

பூந்தமல்லியில் உள்ள திருக்கச்சி நம்பிகள் மற்றும் வரதராஜ பெருமாள் கோயிலில் நிகழ்ச்சியை காண்பிப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. இந்நிலையில் நீதிமன்ற உத்தரவை அடுத்து பூந்தமல்லி வரதராஜ பெருமாள் கோயிலில் இந்து அமைப்பினா் ராமா் பாடல்களை பாடி கோயில் வளாகம் முழுவதும் சுற்றி வந்தனா்.

கோயில் வளாகத்தில் அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருக்க பூந்தமல்லி போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா். மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணா்கள் கோயில் வளாகத்தைச் சோதனை செய்தனா்.

இதே போல பூந்தமல்லி அருகே குமணன்சாவடியில் ஞானசுந்தர விநாயகா் கோயிலில் ராமா் சிலைக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் மற்றும் பஜனை நடைபெற்றது. தொடா்ந்து பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பூந்தமல்லியில் உள்ள அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com