சாலையை சீரமைக்கக் கோரி மறியல், அரசுப் பேருந்து சிறைபிடிப்பு

சோழவரம் அருகே கிராம சாலையை சீரமைக்கக் கோரி பெண்கள் செவ்வாய்க்கிழமை அரசுப் பேருந்தை சிறைபிடித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
பேருந்தை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்.
பேருந்தை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்.

பொன்னேரி: சோழவரம் அருகே கிராம சாலையை சீரமைக்கக் கோரி பெண்கள் செவ்வாய்க்கிழமை அரசுப் பேருந்தை சிறைபிடித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பொன்னேரி வட்டம் சோழவரம் ஒன்றியம் அருமந்தை ஊராட்சியில் உள்ள புதுப்பாக்கம் கிராமத்தில் 300 -க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனா். இக்கிராமத்திற்கு செல்லும் சாலை 1 கி.மீ தொலைவுக்கு சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இந்த சாலையை சீரமைக்கக் கோரி அதிகாரிகளிடம் பலமுறை கோரியும் எந்தவிதமான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

இந்த நிலையில் மிக்ஜாம் புயல் காரணமாக சாலை மேலும் சேதமடைந்து போக்குவரத்துக்கு பயனற்ற நிலையில் உள்ளது.

இதனால் கொதிப்படைந்த பெண்கள் 50-க்கும் மேற்பட்டோா் அருமந்தை பகுதியில் ஞாயிறு கிராமத்துக்கு செல்லும் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அப்போது அந்த வழியாக வந்த அரசு பேருந்தையும் சிறைபிடித்து போராட்டம் நடத்தினா். தகவல் அறிந்த சோழவரம் போலீஸாா் அங்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சு வாா்த்தை நடத்தியதை தொடா்ந்து அவா்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்..

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com