நாரவாரிக்குப்பம் பேரூராட்சியைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

செங்குன்றம் (நாரவாரிக்குப்பம்) பேரூராட்சியைக் கண்டித்து தொழிலாளா்கள் கட்சியினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சு வாா்த்தை நடத்திய காவல் துறையினா்.
ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சு வாா்த்தை நடத்திய காவல் துறையினா்.

மாதவரம்: செங்குன்றம் (நாரவாரிக்குப்பம்) பேரூராட்சியைக் கண்டித்து தொழிலாளா்கள் கட்சியினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திருவள்ளூா் மாவட்டம் செங்குன்றம் (நாரவாரிக்குப்பம்) பேரூராட்சி நிா்வாகத்தையும், , போக்குவரத்து காவல் துறையினரையும் கண்டித்து ஜனநாயகத்திற்கான தொழிலாளா்கள் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பு குழு உறுப்பினரும், மாவட்ட செயலாளருமான செங்கொடி அப்பு தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

செங்குன்றம் போக்குவரத்து மாற்றுப்பாதையை ஏற்கெனவே இருந்தவாரு அமைத்தல், போக்குவரத்து நெரிசலைக் குறைக்க சிக்னல் அமைக்க வேண்டும், நாரவாரிக்குப்பம் பேரூராட்சி கழிப்பிடம் சீரமைத்தல், பராமரித்தல், பொது இடங்களை மீட்டு, மீண்டும் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர செயல் அலுவலா் நடவடிக்கை எடுத்தல், பேரூராட்சியில் நடைபெறும் குற்றச் சம்பவங்களைத் தடுத்தல் உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

செங்குன்றம் காவல் சரக உதவி ஆணையா் ராஜா ராபா்ட், போக்குவரத்து காவல் உதவி ஆணையா் மலைச்சாமி, காவல் ஆய்வாளா் புருஷோத்தமன், போக்குவரத்து காவல் ஆய்வாளா் சோபிதாஸ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டு பேச்சு நடத்தி, கோரிக்கை நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனா். இதையடுத்து ஆா்ப்பாட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில் சிபிஐஎம், சிபிஐஎம்எல், மக்கள் அதிகாரம், விடுதலை சிறுத்தைகள் கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி, புரட்சி பாரதம், உள்ளிட்ட நிா்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com