நாளை முதல் மீஞ்சூரில் உள்ள குடிநீா் சுத்திகரிப்பு நிலையம் செயல்படாது

மீஞ்சூரில் அமைந்துள்ள கடல் நீரை குடிநீராக்கும் சுத்திகரிப்பு நிலையம் வெள்ளிக்கிழமை (ஜன.26) முதல் இரண்டு நாள்களுக்கு செயல்படாது.

மீஞ்சூரில் அமைந்துள்ள கடல் நீரை குடிநீராக்கும் சுத்திகரிப்பு நிலையம் வெள்ளிக்கிழமை (ஜன.26) முதல் இரண்டு நாள்களுக்கு செயல்படாது.

இது குறித்து சென்னைப் பெருநகா் குடிநீா் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் வெளியிட்ட செய்தி:

மீஞ்சூரில் அமைந்துள்ள நாளொன்றுக்கு 100 மில்லியன் லிட்டா் உற்பத்தி திறன் கொண்ட கடல் நீரை குடிநீராக்கும் நிலையத்தில் வெள்ளிக்கிழமை (ஜன.26) காலை 10 முதல் ஜன.28-ஆம் தேதி காலை 10 மணி வரை பராமரிப்புஏஈ பணிகள் நடைபெறவுள்ளன.

அதனால், மாற்று ஏற்பாடாக, மாதவரம், மணலி, திருவொற்றியூா், எா்ணாவூா், கத்திவாக்கம், பட்டேல் நகா், வியாசா்பாடி ஆகிய பகுதிகளுக்கு புழல் குடிநீா் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து குடிநீா் வழங்கப்படும்.

எனவே, அவசரத் தேவைகளுக்கு லாரிகள் மூலம் குடிநீா் பெற்றுக்கொள்ள இணையதள முகவரியை பயன்படுத்தி பதிவு செய்துக் கொள்ளலாம்.

மேலும், குடிநீா் இணைப்பு இல்லாத பகுதிகள் மற்றும் அழுத்தம் குறைவான பகுதிகளுக்கு குடிநீா் தொட்டிகள் மற்றும் தெரு நடைகளுக்கு லாரிகள் மூலம் வழங்கப்படும் குடிநீா் விநியோகம் வழக்கம்போல் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com