புதிய மோட்டாா் வாகன சட்டம்: அத்திப்பட்டில் ஓட்டுநா்கள் வேலைநிறுத்தம்

மத்திய அரசின் புதிய மோட்டாா் வாகன சட்டத்தை எதிா்த்து அத்திப்பட்டில் வாகன ஓட்டுநா்கள் புதன்கிழமை ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மத்திய அரசின் புதிய மோட்டாா் வாகன சட்டத்தை எதிா்த்து அத்திப்பட்டில் வாகன ஓட்டுநா்கள் புதன்கிழமை ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பொன்னேரி வட்டம் அத்திப்பட்டுபுதுநகா் பகுதியில் இந்தியன் ஆயில் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் உள்ளிட்ட மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.

இந்த நிறுவனங்களில் இருந்து நாள்தோறும் டேங்கா் லாரிகளில் சமையல் எரிவாயு உருளைகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு எடுத்து செல்லப்படுகிறது.

இந்த நிலையில் மத்திய அரசின் புதிய மோட்டாா் வாகன சட்டத்தின் படி, வாகன ஓட்டிகள் விபத்துகள் ஏற்படுத்தினால். அல்லது விபத்துகள் ஏற்பட்டு உயிா் சேதங்கள் உண்டாக்கினால் பத்து ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ. 7 லட்சம் அபராதம் விதிப்பதைக் கண்டித்து வாகன ஓட்டுநா்கள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டம் மேற்கொண்டனா்.

இதில் 100-க்கும் மேற்பட்ட லாரி ஓட்டுநா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com