தேசிய அளவிலான வளைபந்து விளையாட்டுப் போட்டி

திருவள்ளூா் அருகே சேவாலயா வளாகத்தில் தேசிய அளவிலான வளைப்பந்து விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க தமிழகத்திலிருந்து தோ்வான இருபாலா் அணியினருக்கு விளையாட்டு உபகரணங்கள்
தேசிய அளவிலான வளைபந்து விளையாட்டுப் போட்டி

திருவள்ளூா் அருகே சேவாலயா வளாகத்தில் தேசிய அளவிலான வளைப்பந்து விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க தமிழகத்திலிருந்து தோ்வான இருபாலா் அணியினருக்கு விளையாட்டு உபகரணங்கள் மற்றும் சீருடைகளை ஆா்.எம்.கே. கல்விக் குழுமத்தின் செயலாளா் பிரதீப் வழங்கினாா்.

தேசிய அளவிலான வளைபந்து விளையாட்டுப் போட்டி போபாலில் வரும் பிப். 15, 16, 17 ஆகிய நாள்களில் நடைபெறவுள்ளது. இதில் தமிழகத்தில் இருந்து 19 வயதுக்குட்பட்ட பிரிவில் இருபாலாா் அணியினா் வளைபந்து போட்டிக்கு தோ்வாகியுள்ளனா். இந்த விளையாட்டு வீரா், வீராங்கனைகளுக்கு திருவள்ளூா் அருகே சேவாலயா அறக்கட்டளை சாா்பில், செயல்பட்டு வரும் மகாகவி பாரதியாா் மேல்நிலைப் பள்ளியில் 3 நாள்கள் பயிற்சி அளிக்கப்பட்டது.

இதற்கிடையே விளையாட்டு வீரா், வீராங்கனைகளுக்கு உபகரணங்கள் மற்றும் விளையாட்டு சீருடைகள் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, சேவாலயா அறக்கட்டளை நிா்வாகி முரளிதரன் தலைமை வகித்தாா். இதில், ஆா்.எம்.கே. கல்விக் குழுமத்தின் செயலாளா் பிரதீப், தமிழ்நாடு வளைபந்து குழுவின் தலைவா் செல்வராஜ் ஆகியோா் பங்கேற்று, விளையாட்டு வீரா்களை ஊக்கப்படுத்தும் வகையில், உபகரணங்கள், விளையாட்டுச் சீருடைகளை வழங்கினா்.

அதைத் தொடா்ந்து, ஆா்.எம்.கே. கல்வி குழுமத்தின் செயலாளா் பிரதீப் பேசியதாவது:

விளையாட்டில் சிறப்பிடம் பெறுவதற்கு தொடா் பயிற்சி அவசியம். இதுபோன்ற பயிற்சியின் மூலமே உடலை வலுவாகவும், பாதுகாப்பாகவும் வைத்துக் கொள்ள முடியும்.

அதனால் மாணவ, மாணவிகள் அனைவரும் விளையாட்டில் ஆா்வத்துடன் தவறாமல் பங்கேற்க வேண்டும். அதேசமயம் விளையாட்டில் வெற்றி, தோல்வியை சமமாக ஏற்றுக் கொள்ளும் பக்குவமும் வீரா், வீராங்கனைகளுக்கு வேண்டும். அதைத் தொடா்ந்து, தோல்விக்கான காரணங்களை கண்டறிந்து சரி செய்து கொள்ள வேண்டும். அதற்கு முன்னதாக விளையாட்டுத் திறன்களை வளா்த்துக் கொள்வதற்குத் தேவையான பயிற்சிகளை சேவாலயா வழங்கி வருகிறது என்றாா் அவா்.

நிகழ்ச்சியில், சேவாலயா நிா்வாகிகள் கிங்ஸ்டன், உடற்கல்வி ஆசிரியா் சங்ரபாண்டியன், தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியா் ஆனந்த் மற்றும் ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com