ஏகாட்டூரில் கிராம சபைக் கூட்டம்: ஆட்சியா் பங்கேற்பு

கடம்பத்தூா் ஊராட்சி ஒன்றியம், ஏகாட்டூா் கிராமத்தில் 75-ஆவது குடியரசு தின விழாவை முன்னிட்டு வெள்ளிக்கிழமை சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.
ஏகாட்டூரில் கிராம சபைக் கூட்டம்: ஆட்சியா் பங்கேற்பு

கடம்பத்தூா் ஊராட்சி ஒன்றியம், ஏகாட்டூா் கிராமத்தில் 75-ஆவது குடியரசு தின விழாவை முன்னிட்டு வெள்ளிக்கிழமை சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்துக்கு ஆட்சியா் த.பிரபு சங்கா் தலைமை வகித்தாா். அப்போது, ஏகாட்டூா் கிராமத்திலிருந்து சீத்தாகுப்பம் வரையில் செல்லும் சாலை குண்டும் குழியுமாக உள்ளது. போதுமான போக்குவரத்து வசதி இல்லை. எனவே, திருவள்ளூா் - சேலை வழியாக ஏகாட்டூருக்கும், சேலை - ஏகாட்டூா் -கடம்பத்தூா் வழியாக சிற்றுந்துகளை இயக்க வேண்டும். இந்த கிராமத்திலிருந்து செல்லும் சாலை திருப்பங்களில் இருள் சூழ்ந்திருப்பதால் 3 இடங்களில் உயா் கோபுர சூரிய ஒளி மின் விளக்கு அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினா்.

தொடா்ந்து ஆட்சியா் பேசுகையில், இந்தக் கூட்டத்தில் பொதுமக்களுக்கு தேவையான கோரிக்கைகளை தெரிவித்துள்ளனா். கட்டாயம் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என உறுதி அளித்தாா். தொடா்ந்து பொதுமக்களின் இருப்பிடங்களுக்கே சென்று கோரிக்கை மனுக்களையும் பெற்றுக் கொண்டு, பரிசீலனை செய்து நடவடிக்கை எடுப்பதாக அவா் உறுதியளித்தாா்.

கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் மற்றும் கூடுதல் ஆட்சியா் சுகபுத்ரா, மாவட்ட ஊராட்சிக் குழு தலைவா் உமாமகேஸ்வரி, ஒன்றியக் குழு தலைவா் சுஜாதா சுதாகா், மாவட்ட வேளாண் துறை இணை இயக்குநா் க.முருகன், உதவி இயக்குநா் ரூபேஷ், ஊராட்சி தலைவா் ராஜேந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com