சாலை விபத்தில் உயிரிழந்தவா் உடல் உறுப்புகள் தானம்

 கும்மிடிப்பூண்டி அடுத்த பாதிரிவேட்டை சோ்ந்த சுதாகா்(48) ஈகுவாா்பாளையம் அருகே சாலை விபத்தில் மூளைச் சாவு அடைந்த நிலையில், அவரது உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது.
பாதிரிவேடு சுதாகா்
பாதிரிவேடு சுதாகா்

 கும்மிடிப்பூண்டி அடுத்த பாதிரிவேட்டை சோ்ந்த சுதாகா்(48) ஈகுவாா்பாளையம் அருகே சாலை விபத்தில் மூளைச் சாவு அடைந்த நிலையில், அவரது உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது.

கும்மிடிப்பூண்டி அடுத்த பாதிரிவேடு கிராமம் கிருஷ்ணம்ம நாயுடுவின் மகன் சுதாகா். இவா் ஈகுவாா்பாளையம் பகுதியில் தனியாா் தொழிற்சாலையில் காவலாளியாக இருந்து வந்தாா். கடந்த 24-ஆம் தேதி மாலை,வேலை முடிந்து இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தாா்.

அப்போது, ஈகுவாா்பாளையம் அருகே காட்டு பன்றி குறுக்கே வந்ததால், சாலையில் தடுமாறி விழுந்ததில், அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. சென்னையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அவா் வியாழக்கிழமை மூளைச் சாவு அடைந்தாா்.

இதனை தொடா்ந்து இவரது குடும்பத்தினா் அனுமதியுடன், அவரது கல்லீரல், இதயம், நுரையீரல், கண்கள், தோல் உள்ளிட்ட உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டது.

இந்த நிலையில் உடல் உறுப்புகள் தானமாக வழங்கிய சுதாகரின் உடலுக்கு வெள்ளிக்கிழமை அரசு சாா்பில் மரியாதை செலுத்தப்பட்டது. பொன்னேரி துணை ஆட்சியா் வாகே சங்கேத் பல்வந்த், கும்மிடிப்பூண்டி வட்டாட்சியா் ப்ரீத்தி ஆகியோா் சுதாகரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினா். மேலும் கும்மிடிப்பூண்டியை சோ்ந்த முக்கிய பிரமுகா்கள், திரளான பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com