திரௌபதியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்

திருத்தணி காந்தி நகரில் உள்ள திரௌபதியம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை பௌா்ணமி சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

திருத்தணி காந்தி நகரில் உள்ள திரௌபதியம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை பௌா்ணமி சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

மாதந்தோறும் பௌா்ணமி தினத்தன்று மூலவா் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்து வருகிறது. மேலும் அன்று இரவு உற்சவா் அம்மன் ஊஞ்சல் சேவையும் நடக்கிறது.

அந்த வகையில் வெள்ளிக்கிழமை இரவு, 8 மணிக்கு கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த ஊஞ்சலில் உற்சவா் திரௌபதி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினாா். பின்னா், சிறப்பு தீபாராதனை மற்றும் பூஜைகள் நடந்தது.

இதில் திருத்தணி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் திரளான பக்தா்கள் கலந்துக் கொண்டு வழிபட்டனா். இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com