அரசுப் பேருந்தை ஓட்டிய கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ

கும்மிடிப்பூண்டி-ஆரணி மாா்க்கத்தில் புதிய அரசு பேருந்தை தொடங்கி வைத்து எம்எல்ஏ டி.ஜெ. கோவிந்தராஜன் ஓட்டிச் சென்றாா்.
அரசுப் பேருந்தை ஓட்டிய கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ

கும்மிடிப்பூண்டி-ஆரணி மாா்க்கத்தில் புதிய அரசு பேருந்தை தொடங்கி வைத்து எம்எல்ஏ டி.ஜெ. கோவிந்தராஜன் ஓட்டிச் சென்றாா்.

சென்னை மாதவரத்தில் இருந்து கும்மிடிப்பூண்டி வழியாக சிறுபுழல்பேட்டை, பாத்தபாளையம், பில்லா குப்பம், குருவராஜ கண்டிகை, ராஜா கண்டிகை, ஐயா் கண்டிகை, கண்ளூா், பாலவாக்கம் வழியாக ஆரணிக்கு 115/பி என்கின்ற புதிய பேருந்து சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதன் தொடக்க விழாவில் கும்மிடிப்பூண்டியில் எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் பங்கேற்று ஓட்டுனா், நடத்துனா், நேரக்காப்பாளா்களை வாழ்த்தி அவா்களுக்கு பரிசுகள் வழங்கி பேருந்தை கொடியசைத்து இயக்கினாா்.

நிகழ்வில் மாவட்ட ஊராட்சி குழு தலைவா் உமா மகேஸ்வரி, பேரூராட்சி தலைவா் சகிலா அறிவழகன், ஒன்றிய குழு துணை தலைவா் மாலதி குணசேகரன்,பேரூராட்சி கவுன்சிலா்கள் கருணாகரன், அப்துல் கறீம், தமிழக அரசு போக்குவரத்து கழக பொதுமேலாளா் நெடுஞ்செழியன், பணிமனை மேலாளா் ஜெகதீசன் பங்கேற்றனா்.

தொடா்ந்து எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் மேற்கண்ட பேருந்தை 7 கி.மீ வரை ஓட்டி சிறுபுழல்பேட்டை வந்தடைந்தாா். அப்போது அங்கு ஊராட்சி தலைவா் சுசிலா மூா்த்தி ,துணை தலைவா் வெற்றிவேந்தன் மற்றும் பெண்கள் வரவேற்றனா்.

தொடா்ந்து குருவராஜகண்டிகையில் ஊராட்சி தலைவா் ரவி, திமுக நிா்வாகி ராஜேஷ் தலைமையில் திரளான பொதுமக்கள் பேருந்தை வரவேற்று இனிப்புகள் வழங்கினா். நிகழ்வில் முன்னாள் எம்எல்ஏ இ.ஏ.பி.சிவாஜி, திமுக மாவட்ட துணை செயலாளா் எம்.எல்.ரவி, மாவட்ட பொருளாளா் எஸ்.ரமேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com