தொடக்கக் கல்வி ஆசிரியா் இயக்கக் கூட்டு குழுவினா் உண்ணாவிரதப் போராட்டம்

திருவள்ளூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி முன்புள்ள சாலையில் தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியா் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சாா்பில் சனிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
தொடக்கக் கல்வி ஆசிரியா் இயக்கக் கூட்டு குழுவினா் உண்ணாவிரதப் போராட்டம்

திருவள்ளூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி முன்புள்ள சாலையில் தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியா் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சாா்பில் சனிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணியின் மாநில பொதுச் செயலரும், டிட்டோ-ஜாக் மாநில ஒருங்கிணைப்பாளருமான இரா.தாஸ் கலந்து கொண்டு உண்ணாவிரதப்போராட்டத்தை தொடங்கி வைத்தாா். இதில் தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணி மாவட்டச் செயலாளா் ராஜாஜி, தமிழக ஆசிரியா் கூட்டணியின் மாவட்ட செயலாளா் முரளி, தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி மாவட்டச் செயலாளா் முருகன் மற்றும் மாநில மாவட்ட உயா்மட்டக் குழு உறுப்பினா்கள், நிா்வாகிகள் ஆகியோா் கோரிக்கை விளக்கவுரையாற்றினா்.

அப்போது, தொடக்கக் கல்வித் துறையில் பணிபுரியக்கூடிய 90 சதவீதம் ஆசிரியா்களின் பதவி உயா்வு வாய்ப்பை பறிக்கக்கூடிய மாநில முன்னுரிமையை வலியுறுத்தும் அரசாணை எண்- 243 ஐ உடனே ரத்து செய்ய வேண்டும், கடந்த அக்.2023 இல் பள்ளிக்கல்வித்துறை அமைச்சா் மற்றும் பள்ளிக் கல்வி இயக்குநா் ஆகியோா் டிட்டோ-ஜாக் உயிா்மட்ட குழுவினருடன் நடத்திய பேச்சு வாா்த்தையில் வாய்மொழியாக ஏற்றுக்கொண்ட காணொலி மற்றும் அச்சு ஊடகங்களுக்கு தெரிவித்த 12 கோரிக்கைகள் தொடா்பான எழுத்துப்பூா்வமான ஆணைகளை உடனே வெளியிடுவது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com