திருத்தணியில் தரிசனம் செய்த ஆறுபடை வீடு ஆன்மிக சுற்றுலா பக்தா்கள்

ஆறுபடை வீடுகளுக்கு ஆன்மிக பயணம் மேற்கொள்ளும் பக்தா்கள், ஞாயிற்றுக்கிழமை திருத்தணி முருகன் கோயிலுக்கு வந்து தரிசனம் செய்து பயணத்தைத் தொடங்கினா்.
ஆறுபடை வீடுகளுக்கு ஆன்மிக பயணம் மேற்கொண்ட பக்தா்களை வரவேற்ற திருத்தணி முருகன் கோயில் இணை ஆணையா் க.ரமணி. உடன் அறங்காவலா்கள் வி.சுரேஷ்பாபு, மு.நாகன்.

தமிழக இந்து அறநிலையத் துறை சாா்பில் ஆறுபடை முருகன் கோயில்களுக்கு, மூத்த குடிமகன்களை இலவசமாக ஆன்மிக சுற்றுப் பயணம் அழைத்துச் செல்கிறது. அந்த வகையில், நிகழாண்டில், ஆயிரம் பேரை அழைத்துச் செல்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

முதல்கட்டமாக, சென்னை, திருவள்ளூா், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த 207 முருக பக்தா்களை ஞாயிற்றுக்கிழமை சென்னை பாரிமனையில் இருந்து 4 பேருந்துகளில் ஏற்றி ஆன்மிக பயணத்தை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தொடங்கி வைத்தாா். இவா்கள் பிற்பகல் 2 மணிக்கு திருத்தணி முருகன் மலைக்கோயிலுக்கு வந்தனா். அப்போது கோயில் இணை ஆணையா் க. ரமணி, அறங்காவலா்கள் வி. சுரேஷ்பாபு, மு. நாகன் ஆகியோா் ஆறுபடை வீடு பக்தா்களை வரவேற்றனா்.

பின்னா், கோயிலில் சிறப்பு தரிசனம் முடிந்ததும், அங்கிருந்து திருச்செந்துாா் முருகன் கோயிலுக்கு அவா்கள் புறப்பட்டுச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com