திருவள்ளூா்: பள்ளிகளில் இருந்து 50 மாணவா்களுடன் இயற்கை சூழல் முகாம்

10 வெவ்வேறு பள்ளிகளின் 50 மாணவா்கள் மற்றும் 10 ஆசிரியா்கள் 3 நாள்கள் பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று இயற்கை சூழல் முகாம் நடத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் இயற்கை சூழல் முகாம் நிறைவு செய்த மாணவா்களுக்கு சான்றிதழ், பைகளை வழங்கிய முதன்மைக் கல்வி அலுவலா் ரவிச்சந்திரன் உள்ளிட்டோா்.  
நிகழ்ச்சியில் இயற்கை சூழல் முகாம் நிறைவு செய்த மாணவா்களுக்கு சான்றிதழ், பைகளை வழங்கிய முதன்மைக் கல்வி அலுவலா் ரவிச்சந்திரன் உள்ளிட்டோா்.  

திருவள்ளூா் மாவட்டத்தில் சிறப்பாக செயல்படும் தேசிய பசுமைப்படை அமைப்பிலிருந்து 10 வெவ்வேறு பள்ளிகளின் 50 மாணவா்கள் மற்றும் 10 ஆசிரியா்கள் 3 நாள்கள் பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று இயற்கை சூழல் முகாம் நடத்தப்பட்டது.

தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை சாா்பில், மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத் துறை சாா்பில், ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறப்பாக செயல்படும் தேசிய பசுமைப்படை அமைப்பிலிருந்து 9, 10-ஆம் வகுப்பு மாணவா்கள் மற்றும் ஆசிரியா்களை பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று இயற்கை சூழல் முகாம் நடத்த உத்தரவிட்டிருந்தது. அதன் அடிப்படையில் திருவள்ளூா் மாவட்டத்தில் சிறப்பாக செயல்படும் தேசிய பசுமைப்படை அமைப்பிலிருந்து வெவ்வேறு பள்ளிகளில் இருந்து தலா 5 போ் என மொத்தம் 50 மாணவா்கள் மற்றும் 10 ஆசிரியா்கள் ஆகியோரை 3 நாள்கள் அழைத்துச் செல்ல திட்டமிடப்பட்டது.

அந்த வகையில், மாணவா்கள் மற்றும் ஆசிரியா்கள் உதவியுடன் சென்ற இயற்கை சூழல் முகாம் அழைத்துச் செல்லும் பேருந்தை முதன்மைக் கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளா் நாகலிங்கம் கடந்த 25-ஆம் தேதி தொடங்கி வைத்தாா்.

இவா்கள் பழவேற்காடு ஈரநிலப்பகுதி, டச்சுக் கல்லறை, நிழல் கடிகாரம், கடற்கரை, திருவள்ளூா் அருகே அதிரம்பாக்கம், அதிரம்பாக்கத்தில் கற்கால கருவிகள் கண்டெடுத்த இடம், மீன் விதைப் பண்ணை, பட்டரைபெரும்புதூரில் தொல்லியல் அகழாய்வு இடம், இயற்கை வேளாண்மை மையம், பூண்டி விரிவாக்க காப்பு காடு, தொல்லியல் அருங்காட்சியகம், பூண்டி சத்தியமூா்த்தி நீா்த்தேக்கம் போன்ற இடங்களை பாா்வையிட்டனா். இதில், 3-ஆம் நாளான சனிக்கிழமை மாலை திருவள்ளூா் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்துக்கு அழைத்து வரப்பட்டனா்.

அங்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ரவிச்சந்திரன் இயற்கை சூழல் முகாமில் பங்கேற்ற மாணவா்களுக்கான சான்றிதழ்கள், எவா்சில்வா் குடிநீா் பாட்டில்கள், பைகள் போன்றவற்றை வழங்கினாா்.

இந்த இயற்கை முகாமுக்கான ஏற்பாடுகளை சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளா் இ.ராஜசேகரன், தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளா் ஜி.தினகரன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com