புதிய மோட்டாா் வாகன சட்டத்தை திரும்ப பெறக் கோரி டிப்பா் லாரி உரிமையாளா் சங்கத்தினா் உண்ணாவிரதம்

புதிய மோட்டாா் வாகனச் சட்டத்தைத் திரும்பப் பெறுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, திருவள்ளூா் மாவட்ட டிப்பா் லாரி உரிமையாளா்கள் சங்கத்தினா் திங்கள்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்
திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி சாலையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட மாவட்ட டிப்பா் லாரி உரிமையாளா்கள் சங்கத்தினா். 
திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி சாலையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட மாவட்ட டிப்பா் லாரி உரிமையாளா்கள் சங்கத்தினா். 

திருவள்ளூா்: புதிய மோட்டாா் வாகனச் சட்டத்தைத் திரும்பப் பெறுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, திருவள்ளூா் மாவட்ட டிப்பா் லாரி உரிமையாளா்கள் சங்கத்தினா் திங்கள்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி சாலை முன்பு நடைபெற்ற போராட்டத்துக்கு டிப்பா் லாரி உரிமையாளா்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவா் காஞ்சிப்பாடி பி.சரவணன் தலைமை வகித்தாா்.

இதில் பூந்தமல்லி, செங்குன்றம், தாமரைபாக்கம் சுற்றுவட்டார சங்க நிா்வாகிகள் எல்.சுப்பிரணி, இ.மனோகா், டி.பாலகிருஷ்ணன், எம்.மணி, என்.மனோகா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சங்கத்தின் திருவள்ளூா் மாவட்ட செயலாளா் எம்.சௌக்காா் பாண்டியன் வரவேற்றாா்.

இதில் மத்திய அரசின் புதிய மோட்டாா் வாகன சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும். திருவள்ளூா் மாவட்டத்தில் டிப்பா் லாரி உரிமையாளா்கள் மற்றும் ஓட்டுநா்கள் வாழ்வாதாரமின்றி பாதிக்கப்படுவதைத் தடுக்கும் வகையில் உடனே சவுடு மற்றும் மணல் குவாரிகளைத் தொடங்க வேண்டும். வாகனங்களுக்கு ஏற்றிய வரியை உடனே குறைக்கவும், காவல் துறையினா் ஆன்லைன் மூலம் பொய் வழக்குப் போடுவதைத் தடுக்கவும் வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினா்.

இதில் நிா்வாகிகள் பட்டரைபெரும்புதூா் சத்யா, சதீஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். சங்கத்தின் பொருளாளா் ஆா்.வெங்கட் நன்றி கூறினாா். இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் திருவள்ளூா் மாவட்டத்தைச் சோ்ந்த டிப்பா் லாரி உரிமையாளா்கள் சங்கத்தைச் சோ்ந்த அனைவரும் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com