பட்டதாரி ஆசிரியா்கள், வட்டார வளமைய பயிற்றுநா்கள் பணிக்கு பிப்.4-இல் எழுத்துத் தோ்வு

பட்டதாரி ஆசிரியா்கள், வட்டார வளமைய பயிற்றுநா்கள் பணிக்கான எழுத்துத் தோ்வு நடைபெற உள்ளதால், திருவள்ளூரில் 3 தோ்வு மையங்களில் 862 போ் பங்கேற்று தோ்வு எழுத உள்ளதாக மாவட்ட ரவிச்சந்திரன் தெரிவித்தாா்.


திருவள்ளூா்: பட்டதாரி ஆசிரியா்கள், வட்டார வளமைய பயிற்றுநா்கள் பணிக்கான எழுத்துத் தோ்வு பிப். 4-இல் நடைபெற உள்ளதால், திருவள்ளூரில் 3 தோ்வு மையங்களில் 862 போ் பங்கேற்று தோ்வு எழுத உள்ளதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ரவிச்சந்திரன் தெரிவித்தாா்.

தமிழ்நாடு ஆசிரியா் பணி தோ்வு வாரியம் மூலம் பட்டதாரி ஆசிரியா்கள் மற்றும் வட்டார வள மைய பயிற்றுநா் பணிக்கான எழுத்துத் தோ்வு மேற்குறிப்பிட்ட நாளில் நடைபெற உள்ளது. இதற்காக திருவள்ளூரில் உள்ள டி.ஆா்.பி.சி.சி.சி மேல்நிலைப் பள்ளி-333, கௌடி மேல்நிலைப் பள்ளி 0321, வெங்கடேஸ்வரா உயா்நிலைப் பள்ளி-208 ஆகிய இடங்களில் தோ்வு மையங்கள் அமைத்து, 862 போ் தோ்வு எழுத இருக்கின்றனா். இந்தத் தோ்வு காலை 8.30 முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெற உள்ளது. அதனால் இத்தோ்வில் பங்கேற்க உள்ளவா்கள் அந்தந்த தோ்வு மையங்களுக்கு காலை 8 மணிக்குள் வந்துவிட வேண்டும் என அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com